மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 பிப் 2021

தடையை உடைத்த விஷால்... போட்டிக்கு வந்த ஆனந்தி - இந்த வாரம் என்ன புது ரிலீஸ்? #FridayMovies

தடையை உடைத்த விஷால்... போட்டிக்கு வந்த ஆனந்தி - இந்த வாரம் என்ன புது ரிலீஸ்? #FridayMovies

திரையரங்குகள் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதால் வெள்ளிக்கிழமை ரிலீஸ் படங்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு வாரமும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. மாஸ்டர், ஈஸ்வர் தொடங்கிவைத்த ஹிட் ஓப்பனிங்கைப் பின்தொடர்ந்து, கபடதாரி, களத்தில் சந்திப்போம், குட்டி ஸ்டோரி, பாரிஸ் ஜெயராஜ், கேர் ஆஃப் காதல் படங்கள் சமீப வாரங்களில் வெளியாகின. தொடர்ந்து, இந்த வாரத்துக்கான தமிழின் முக்கிய ரிலீஸ் படங்கள் என்னென்ன என்று பார்த்துவிடலாம்.

சக்ரா

மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்த படம் விஷாலின் சக்ரா. வெளியாகுமா, வெளியாகாதா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஷாலுக்கும்தான். இறுதிவரை உறுதியாகாமல் இருந்த ரிலீஸானது நேற்று உறுதியானது. டிரைடண்ட் ரவீந்திரனின் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒப்பந்தமான கதையை விஷால் தயாரிக்க சக்ரா படமாக உருவாகிவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி இடைக்கால தடை உத்தரவையும் வழங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று நடந்த விசாரணையில் தீர்ப்பு விஷாலுக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால், வழக்கு இன்னும் முடியவில்லை. முதல் இரண்டு வாரத்துக்கான சக்ரா வசூல் விவரத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டிருக்கிறது நீதிமன்றம். எது எப்படியோ, சக்ரா இன்று வெளியாகிவிட்டது. விஷாலுக்கு நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். ராணுவ அதிகாரியாக விஷால் இந்தப் படத்தில் வருகிறார். படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

கமலி ஃப்ரம் நடுக்காவேரி

விஷாலுக்குப் போட்டியாக களமிறங்கும் மற்றுமொரு படம் ‘கமலி ஃப்ரம் நடுக்காவேரி’. நடிகை ஆனந்தி நாயகியாக நடித்திருக்கிறார். பிரதாப் போத்தன், ஸ்ரீஜா, இமான் அண்ணாச்சி, ரோஹித் செராப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதை இதுதான். தஞ்சையில் கிராமத்தில் படித்து வளரும் நாயகி, சென்னை ஐஐடியில் படிக்க வருகிறார். இங்கு ஏற்படும் சிக்கல்கள், அந்தத் தடையை எப்படி உடைத்தெறிகிறார் என்பதே கதை. பாசிட்டிவான படமாக இருக்கும் என்கிறார்கள்.

செமதிமிரு

கன்னடம் & தெலுங்கு சினிமாக்களை விரும்பி பார்க்கும் ரசிகரென்றால் செமதிமிரு பக்கம் ஒதுங்கலாம். நடிகர் அர்ஜுனின் மருமகனும் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் உடன் பிறந்த சகோதரருமான துருவா சார்ஜா ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘செமதிமிரு’. நந்தகிஷோர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். துருவா சார்ஜாவுக்கு நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்கூட சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வைரலானது. தமிழ், தெலுங்கு & கன்னட மொழிகளில் இன்று வெளியாகியிருக்கிறது. ஹீரோவே வில்லன். வில்லனே ஹீரோ... படுபயங்கரமான ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்காம்.

டாம் & ஜெர்ரி

புகழ்பெற்ற கார்ட்டூன் அனிமேஷன் நகைச்சுவைப் படமான 'டாம் அண்ட் ஜெர்ரி' முற்றிலும் புதிய வடிவத்தில் மீண்டும் வந்திருக்கிறது. கார்ட்டூன் அனிமேஷன் நகைச்சுவைப் பாத்திரங்களான டாம் அண்ட் ஜெர்ரியை உருவாக்கியது வால்ட் டிஸ்னி நிறுவனம்தான். டாம் & ஜெர்ரியை பல பரிணாமங்களில் பார்த்துவிட்டோம். இப்போது முழு நீளப் படமாகத் திரைக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தில் சோலி கிரேஸ் மோரேட்ஸ், மைக்கேல் பெனா, கென் ஜியோங், ஜோர்டான் போல்ஜர் மற்றும் பல்லவி ஷார்தா ஆகியோர் நடித்துள்ளனர். லைவ் ஆக்‌ஷனுக்கு நடுவே டாம் & ஜெர்ரியின் அனிமேஷனும் இருக்கும்படி இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இப்படியான லைவ் - ஆக்‌ஷன் ஹைப்ரிட் நகைச்சுவைப் படமாக இதை, டிம் ஸ்டோரி இயக்கியுள்ளார். ஆங்கிலம் மட்டுமின்றி தமிழிலும் படம் வெளியாகியிருக்கிறது. நாஸ்டாலஜிக் நினைவுகளைத் தூண்டிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

ஜாலியாகப் பார்த்து என்ஜாய் பண்ணுங்க... ஹேப்பி வீக்கெண்ட்!

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வெள்ளி 19 பிப் 2021