மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 பிப் 2021

எட்டு ஹீரோயின்ஸ், ஒரு சைக்கோ ராஜா...! பிரபுதேவா மிரட்டும் பஹீரா டீஸர்

எட்டு ஹீரோயின்ஸ், ஒரு சைக்கோ ராஜா...! பிரபுதேவா மிரட்டும் பஹீரா டீஸர்

வித்தியாசமான கெட்டப்பில் பிரபுதேவா நடிக்கும் பஹீரா படத்தின் டீஸர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதில், சிம்பு நடிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான AAA படம் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. அதன்பிறகு, அஜித் நடித்த நேர்கொண்டப் பார்வை படத்தில் கூட நடித்திருந்தார். தற்பொழுது இவர் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பஹீரா’. சைக்கோ த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது.

முழுக்க முழுக்க வில்லத்தனம் காட்டுகிறார் பிரபுதேவா. மொட்டைத்தலை, க்ளீன் ஷேவ் என வித்தியாசமான பல கெட்டப்புகளில் பிரபுதேவா நடித்திருக்கிறார். கூடுதல் சர்ப்ரைஸ் என்னவென்றால், படத்தில் எட்டு நாயகிகள் நடித்திருக்கிறார்கள். அமைரா, சோனியா அகர்வால், சஞ்சிதா, ஜனனி, சாக்‌ஷி, ரம்யா நம்பீசன், காயத்ரி என எட்டு நாயகிகளுடன் பிரபுதேவா செய்யும் அட்டகாசம் ரகளையாக இருக்கிறது. தவிர, நாசர், பிரகதி முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள்.

‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே... உன்ன சிக்க வச்சிக் கொல்லுறேன்டி மயிலே..’ என பிரபுதேவா பேசும் வில்லத்தன வசனங்கள் ரகளையாக இருக்கிறது. இந்தப் படம் குறித்த பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பஹீரா டீஸர் வீடியோ

-ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வெள்ளி 19 பிப் 2021