மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 பிப் 2021

பாகுபலி 2 விட குறைவா? 'ஆர்.ஆர்.ஆர்' உரிமைக்கு லைகா கொடுத்த தொகை !

பாகுபலி 2 விட குறைவா? 'ஆர்.ஆர்.ஆர்' உரிமைக்கு லைகா கொடுத்த தொகை !

பாகுபலி எனும் பிரம்மாண்டப் படைப்பினைக் கொடுத்த இயக்குநர் ராஜமெளலி. இவரின் அடுத்த பிரம்மாண்டம் ‘ஆர் ஆர் ஆர்’. ‘இரத்தம் ரணம் ரெளத்ரம்’ என்றழைக்கப்படும் இந்தப் படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் உருவாகிவருகிறது.

பாகுபலியில் பரபாஸ் & ராணா மாதிரி, இந்தப் படத்திலும் இரட்டை நாயகர்கள் நடித்திருக்கிறார்கள். தெலுங்கின் ஸ்டார் நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் இருவரும் நடித்திருக்கிறார்கள். அதோடு, அலியா பட், அஜய்தேவ்கன், ஸ்ரேயா உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளங்களே நடித்திருக்கிறது. பாகுபலியில் மன்னர் காலத்துக் கதையோடு வந்தவர், இந்த முறை சரித்திரக் கதையோடு வந்திருக்கிறார் ராஜமெளலியின் தந்தை விஜயேந்திரப் பிரசாத்.

பாகுபலியைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் எம் எம் கீரவாணி இசையில் பாடல்கள் உருவாகியிருக்கிறது. ஏற்கெனவே படத்திலிருந்து ஜூனியர் என்.டி.ஆர் & ராம் சரண்களுக்கான அறிமுக டீஸர் வீடியோ வெளியாகி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், வருகிற அக்டோபர் 13ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. அதனால், படத்திற்கான இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. எப்படியும் கிட்டத்தட்ட 450 கோடி பட்ஜெட்டில் படத்தை உருவாக்கிவருவதாகத் தெரிகிறது.

இந்தப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமைக்கு பெரும் தயாரிப்பு நிறுவங்கள் போட்டியிட்டன. கடும் போட்டிக்கு மத்தியில், லைகா நிறுவனம் ஆர் ஆர் ஆர் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இந்நிலையில், எத்தனைக் கோடிக்கு கைப்பற்றியது என்று விசாரித்தால், சுமார் 45 கோடிக்கு பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ராஜமெளலியின் முந்தைய படமான பாகுபலி 2விற்கான தமிழக ரிலீஸ் உரிமை 47 கோடிக்கு விற்பனையானதாம். அதோடு ஒப்பிடுகையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கும் விலை குறைவு.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

வியாழன் 18 பிப் 2021