மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 பிப் 2021

விக்ரம் எடுக்கும் முயற்சி : துருவநட்சத்திரம் விரைவில் ஒளிரும் !

விக்ரம் எடுக்கும் முயற்சி : துருவநட்சத்திரம் விரைவில் ஒளிரும் !

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு துவங்கிய படம் 'துருவநட்சத்திரம்'. படத்தில் ஸ்டைலிஷான கெட்டப்பில் விக்ரம் நடித்திருக்கிறார். படத்திலிருந்து டீஸர்கள் மட்டும் வெளியான நிலையில் படம் வந்தபாடில்லை. பொருளாதார சிக்கலினால் தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தோடு வெளியாக முடியாமல் சிக்கலில் சிக்கிய படமிது. ஐசரி கணேஷ் உதவியால் எனை நோக்கிப் பாயும் தோட்டா வெளியாகிவிட்டது. தற்பொழுது, துருவ நட்சத்திரத்தை ஒளிரவிட முயற்சி எடுத்துவருகிறார்கள். குறிப்பாக, விக்ரம் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியின் படி, முதலில் படத்தின் மீதமுள்ள பணிகளை முடிக்க இருக்கிறார்கள். டப்பிங் பணிகளை மார்ச்சில் மேற்கொள்கிறார் விக்ரம். அதனால், எடிட்டிங் பணிகளை முடித்து தயார் செய்யும் படி கெளதமை கேட்டிருக்கிறார் விக்ரம். தற்பொழுது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கிறார் விக்ரம். இப்படத்துக்கான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்து முடித்திருக்கிறார். பிப்ரவரியோடு படப்பிடிப்பு முடிவதால், மார்ச்சில் துருவநட்சத்திரம் டப்பிங் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகச் சொல்லப்படுகிறது. விக்ரமின் டப்பிங் முடிந்தால் படம் ரிலீஸூக்கு ரெடியாகிவிடும்.

இதன்பிறகு தான், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடித்துவரும் கோப்ரா படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பை முடிக்க இருக்கிறார். ஆக, துருவ நட்சத்திரம், கோப்ரா என இந்த வருடம் அடுத்தடுத்து படங்கள் விக்ரமுக்கு ரிலீஸாக இருக்கிறது.

- தீரன்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

வியாழன் 18 பிப் 2021