மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 பிப் 2021

இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்குச் சென்ற ரஜினிகாந்த்

இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்குச் சென்ற ரஜினிகாந்த்

கோடம்பாக்கம் பாலத்துக்கு முன்பாக அமைந்திருந்த எம்.எம். தியேட்டர், தற்போது ‘இளையராஜா ஸ்டூடியோ’ ஆக மாறியுள்ளது. பிரசாத் ஸ்டூடியோவுடனான சிக்கல் தொடங்கியபோதே, புதிய ஸ்டூடியோவை அமைப்பதற்கான பணிகளில் இறங்கினார் இளையராஜா. அதன்படி, இளையராஜா ஸ்டூடியோ எனும் பெயரில் இசைக் கோர்ப்புக்கான புதிய ஸ்டூடியோவை உருவாக்கியுள்ளார் ராஜா.

சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த ஸ்டூடியோவில் முதன்முதலாக, வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கான இசைக் கோர்ப்பு பணிகளைத் தொடங்கினார் இளையராஜா. முதல் நாள் இசைக் கோர்ப்புப் பணிக்கு வெற்றிமாறன், சூரி மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், பல திரைப் பிரபலங்களும் இந்த ஸ்டூடியோவுக்குச் சென்று இளையராஜாவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆச்சரியத்தக்கவிதமாக இளையராஜா ஸ்டூடியோவுக்கு ரஜினிகாந்த் சென்றார். கோயிலுக்குச் சென்று வந்த உணர்வு ஏற்பட்டதாகக் கூறியிருக்கிறார் ரஜினி. புதிய ஸ்டூடியோவில் இளையராஜா பணியாற்றுவதை அமர்ந்து பார்த்திருக்கிறார். அதோடு, சில மணி நேரம் இருவரிடையே நீண்ட உரையாடலும் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் பிலிம் சிட்டியில் இருக்கும்போது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை வந்தார் ரஜினி. தீவிர மருத்துவ ஆலோசனையினால், கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்தார். அதோடு படப்பிடிப்புக்கும் நீண்ட இடைவெளி விட்டிருக்கிறார். தவிர, வெளியே எங்கேயும் செல்லவும் இல்லை. இந்த நிலையில், திடீரென இளையராஜாவைச் சந்தித்திருக்கிறார். நேற்று இளையராஜா ஸ்டூடியோவுக்குச் சென்றது மட்டுமல்லாமல், அதற்கு முன்தினம், இளையராஜாவின் தி.நகர் வீட்டுக்கும் சென்று பார்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

புதன் 17 பிப் 2021