மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 பிப் 2021

தமிழ் சினிமாவின் புது ட்ரெண்ட்... எங்கே போய் முடிய போகிறதோ?

தமிழ் சினிமாவின் புது ட்ரெண்ட்... எங்கே போய் முடிய போகிறதோ?

தமிழ் சினிமாவில் புதிது புதிதாக ட்ரெண்டுகள் மாறிக்கொண்டே இருக்கும். தொடர்ச்சியாக பேய்ப் படங்களாக வெளியாகும். திடீரெனப் பார்த்தால் காமெடிப் படங்களாக வந்துகொண்டிருக்கும். பிறகு, பேமிலி டிராமாவாக ஒரு காலத்தில் வந்துகொண்டிருந்தது. இப்படி, ஒரு விஷயத்தை தொடங்கினால், அதைத் தொடர்ச்சியாகப் பின்தொடரும் வழக்கம் தமிழ் சினிமாவுக்கு உண்டு.

பெரிய ஹீரோக்களின் பட அறிவிப்போ, ரிலீஸோ எதுவென்றாலும் குறிப்பிட்ட ஏதோ ஒரு தேதியில் அல்லது கிழமையில் மட்டுமே வெளியாகும். அதை அவர்களுக்கான ராசியாக நினைத்துவருகிறார்கள். உதாரணத்துக்கு, அஜித்தின் எந்தப் பட அறிவிப்பு என்றாலும் சரி, ரிலீஸ் என்றாலும் சரி வியாழக்கிழமை மட்டுமே வெளியாகும். இது, அஜித்தின் லக்கி தினமாக பார்க்கப்படுகிறது. சாய்பாபா மீதான அன்பின் காரணமாகவும் என்றும் சொல்லலாம். கூடுதலாக வியாழக்கிழமையிலிருந்து ஞாயிறு வரையிலான வசூலை மனத்தில் வைத்தும் மேற்கொள்வதாகக்கூட கருதலாம்.

இப்படி, ராசியான நாள் என்பதை தாண்டி, ராசியான நேரத்தையும் சினிமாவில் பயன்படுத்தும் புதிய ட்ரெண்ட் தமிழ் சினிமாவில் உருவெடுத்திருக்கிறது. பொதுவாக ஒரு படத்தின் போஸ்டர் அறிவிப்போ, டிரெய்லர் அறிவிப்போ குறிப்பிட்ட தேதியின் மாலை ஐந்து மணிக்கோ, ஆறு மணிக்கோ அல்லது அஜித், விஜய் மாதிரியான பெரிய நடிகரென்றால் நள்ளிரவு 12 மணிக்கோ வெளியாகும். ஏனென்றால், மாலை நேரம்தான் ரசிகர்கள் அதிகமாக சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார்கள். அந்த நேரம் வெளியாகும்போது ரீச் அதிகமாக இருக்கும். இப்போதெல்லாம், படங்களின் போஸ்டர் அறிவிப்போ, டிரெய்லர் அறிவிப்போ எந்த நாள் வெளியாகிறது என்பதை தாண்டி, இத்தனை மணிக்கு, இத்தனை நிமிடத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை டரியலாக்கி வருகிறது.

சான்றாக, சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் 14ஆம் தேதி 4.05 மணிக்கு வெளியானது. 14.01.21 கூட்டினால் 9 வரும். அதுபோல, 4.05 கூட்டினால் 9 வரும். மாநாடு டீஸர் மதியம் 2.34க்கு வெளியானது, இதைக் கூட்டினால் 9 வரும். இப்படி, கே.ஜி.எஃப் உள்ளிட்ட பல படங்களுமே இப்படியாக, அறிவிப்பு வெளியாகும் நிமிடம் வரை ராசிப்பார்த்து வெளியிடுகிறார்கள்.

சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் கர்ணன் படத்தின் அறிவிப்பு வெளியானது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை 11.06 மணிக்கு ரிலீஸ் செய்தது படக்குழு. தொடர்ந்து, ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘அயலான்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் நாளை காலை 11.03 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயனுக்கு உருவாகும் முதல் பாடல் இது.

ரசிகர்களுக்கு ஒரே ஒரு சந்தேகம் தான். இந்த மாதிரியான அறிவிப்புக்கு யார் ராசிக்கு ஜாதகம் பார்ப்பார்கள்? நடித்திருக்கும் நடிகரின் ராசியா அல்லது பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளரின் ராசியைப் பார்க்கிறாரா என்பது தெரியவில்லை. இனி, எதிர்காலத்தில் இத்தனை நிமிடம் என்பதைத் தாண்டி, இத்தனை விநாடிக்கு எனச் சொன்னாலும் சொல்லுவார்கள் போல..!

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

3 நிமிட வாசிப்பு

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

புதன் 17 பிப் 2021