ஜெகமே தந்திரம் ரிலீஸை வைத்து ஓடிடி தளம் போடும் திட்டம்!

entertainment

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் திரைக்கு வரத் தயாராக இருக்கும் படம் ‘ஜெகமே தந்திரம்’. தனுஷூக்கு நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். தவிர, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

கடந்த வருட ஏப்ரலில் வெளியாகியிருக்க வேண்டிய படம், கொரோனாவினால் தள்ளிப் போனது. தற்பொழுது, இப்படம் தியேட்டரா அல்லது ஓடிடியா என்பதில் பலவித கருத்துகள் நிலவிவந்தன. இந்நிலையில், ஜெகமே தந்திரம் ஓடிடி ரிலீஸ் தான் என்பதை உறுதியாக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்திருக்கிறார். இவரின் மற்றுமொரு படமான சில்லுக்கருப்பட்டி இயக்குநரான ஷலீதா ஷமீம் இயக்கியிருக்கும் ‘ஏலே’ படத்தை தியேட்டரில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டதால், நேரடியாக விஜய் டிவியில் ‘ஏலே’ வெளியாகும் என்று அறிவிப்பை வெளியிட்டு அதிரடித்தார்.

அதோடு மட்டுமல்லாமல், கொரோனா லாக்டவுண் நேரத்தில் ஜெகமே தந்திரத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டார் சசிகாந்த். அதற்காக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திடம் பேசினார். ஆனால், திரையுலகினருக்காகவும், தனுஷூக்காகவும் அந்த திட்டத்தைக் கைவிட்டார். மீண்டும் தியேட்டரில் மட்டுமே வெளியாகும் என்று உறுதியளித்தார். தற்பொழுது அதே நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகைக்கு ஜெகமே தந்திரம் படத்தை வாங்கியிருக்கிறதாம்.

மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், இப்படத்தை இந்தியாவின் 6 மொழிகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். எந்த மொழியில் டப் செய்தாலும், சிக்கல் இல்லாத பொதுவான காட்சிமொழியோடு இருக்கிறதாகச் சொல்கிறார்கள். இந்தப் படத்தின் மூலம் இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடிக்க முடியும் என்று நெட்ஃப்ளிக்ஸ் நம்புகிறதாம்.

– தீரன்�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *