மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 பிப் 2021

இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி!

சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் படுதோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் நேற்று (பிப்ரவரி 15) நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் 19 ஒவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் 2 ரன்களும், லாரன்ஸ் 19 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணியை விட, இங்கிலாந்து அணி 429 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் இன்று (பிப்ரவரி 16) நடைபெற்ற நான்காவது நாள் ஆட்டத்தில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இந்திய வீரர்கள் அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளையும் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்

இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளும் சாய, இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

செவ்வாய் 16 பிப் 2021