மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 பிப் 2021

அப்பா, அண்ணா போல இவரும் ஹீரோ ஆகிறார்.. விஷ்ணுவர்தன் இயக்கப் போகும் நடிகர் !

அப்பா, அண்ணா போல இவரும் ஹீரோ ஆகிறார்.. விஷ்ணுவர்தன் இயக்கப் போகும் நடிகர் !

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். ஆர்யா நடிப்பில் வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’ ரசிகர்கள் மத்தியில் விஷ்ணுவர்தனைப் பிரபலப்படுத்தியது. அதன்பிறகு நடிகர் அஜித்துடன் இணைந்து இரண்டு பெரிய ஹிட் படங்களைக் கொடுத்தார். அதாவது, 2007-ல் பில்லா மற்றும் 2013-ல் ஆரம்பம் படங்கள் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான படங்களே. மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விஷ்ணுவர்தனின் அடுத்தப் படத்தில் புதுமுக நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்.பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்துக்கு படம் இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் விஷ்ணுவர்தன். சேவியர் பிரிட்டோ தன்னுடைய மருமகனை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார். அதாவது, இயக்குநர் சினேகா பிரிட்டோவின் கணவரான ஆகாஷ் முரளி தான் அது. இன்னும் எளிமையாக இவர் யாரென்று கூறவேண்டுமென்றால், நடிகர் முரளியின் இளைய மகனான அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி தான் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.

விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் இந்தப் படம் குறித்த அறிவிப்பை விரைவிலேயே எதிர்பார்க்கலாம். நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைத்தையும் உறுதி செய்துவிட்டு, அறிவிப்பை வெளியிட இருக்காராம் சேவியர் பிரிட்டோ. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி பெரிய வெற்றியையும் பெற்றது மாஸ்டர். அதனால், இவரின் தயாரிப்பில் உருவாவதால், இந்தப் படத்திற்கும் நிச்சயம் எதிர்பார்ப்பு நிலவும் என்பதில் சந்தேகமில்லை.

தற்பொழுது, சித்தார் மல்கோத்ரா நடிப்பில் பாலிவுட்டில் விஷ்ணுவர்தன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘Shershaah’. வார் டிராமாவான இந்தப் படம் முழுமையாக முடிந்து ரிலீஸூக்குத் தயாராக இருக்கிறது.

-ஆதினி

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

செவ்வாய் 16 பிப் 2021