மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 பிப் 2021

இணையத்தை காதலால் உருகவைத்த இரண்டு டீஸர்கள்!

இணையத்தை காதலால் உருகவைத்த இரண்டு டீஸர்கள்!

காதலர் தின ஸ்பெஷலாக வெளியான பிரபாஸ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் படங்களின் டீஸர்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

காதலர் தினச் சிறப்பாக நேற்று பல திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியானது.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஏப்ரல் 09 ஆம் தேதி படம் வெளியாவதாக அறிவிப்பு வெளியானது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானிஷங்கர் நடிப்பில் உருவாகும் ஓ மணப்பெண்ணே படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியானது. சுந்தர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படம், தெலுங்கில் வெளியான பெல்லிசூப்புலு படத்தின் ரீமேக்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

விக்ரம் பிரபு & வாணிபோஜன் நடிப்பில் உருவாகும் 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியானது.

இந்த லிஸ்டில் இரண்டு டீஸர்கள் இணையத்தில் வைரலானது. ஒன்று, பாகுபலி நாயகன் பிரபாஸ் , பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகிவரும் 'ராதே ஸ்யாம்' படத்தின் டீஸர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டீஸர் வெளியாகி டிரெண்டானது. படமானது ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இரண்டாவது, ஜி.வி.பிரகாஷ்குமார் , திவ்யா பாரதி நடிப்பில் உருவாகிவரும் பேச்சிலர் பட டீஸர். காதலாகி காதலில் உருகும் இந்த டீஸர் யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

திங்கள் 15 பிப் 2021