மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 பிப் 2021

பிரதமர் வரை சென்ற ‘வலிமை அப்டேட்’: அஜித் வெளியிட்ட அறிக்கை!

பிரதமர் வரை சென்ற   ‘வலிமை அப்டேட்’: அஜித் வெளியிட்ட அறிக்கை!

ரசிகர்கள் பொதுவெளியிலும் சமூக வலைதளத்திலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நடிகர் அஜித்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் வலிமை. இந்தப் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் கதறி வருகிறார்கள். தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலிமை அப்டேட் என ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் பார்க்க சென்ற அஜித் ரசிகர்கள் சிலர் வலிமை அப்டேட் எங்கே என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடம் கேட்கும் வீடியோவும் வெளியானது.

நேற்று (பிப்ரவரி 14) தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, நேரு அரங்கத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, அஜித் ரசிகர் ஒருவர் ‘வலிமை’ அப்டேட் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பாக இன்று (பிப்ரவரி 15) அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் அஜித்குமார்,

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில், நான் நடித்து இருக்கும் ‘வலிமை’ சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும் சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், “ வலிமை படத்துக்காக நீங்கள் காண்பித்து வரும் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட உள்ளதால் சற்று பொறுமையாக இருக்கவும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

திங்கள் 15 பிப் 2021