மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 பிப் 2021

இப்போதைக்கு ஷங்கர் - ராம் சரண் படம் துவங்கவில்லை: ஏன்?

இப்போதைக்கு ஷங்கர் - ராம் சரண் படம் துவங்கவில்லை: ஏன்?

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கிறார் எனும் தகவல் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவசர அவசரமான படத்துக்கான அறிவிப்பு வெளியானது. ஆனால், படம் இப்போதைக்கு துவங்கப் போவது இல்லை. அதற்கு காரணமும் இருக்கிறது.

தற்பொழுது ராஜமெளலி இயக்கத்தில் உருவாகும் ஆர் ஆர் ஆர் படத்தில் ஜூனியர் என் டி ஆர் உடன் நடித்துவருகிறார் ராம் சரண். மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பே முடியவில்லை. ராஜமெளலி படத்தின் ஷுட்டிங்கில் இன்னும் இரண்டு மாதங்கள் நடிக்கிறார் ராம்சரண். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழியில் வெளியாவதால் இரண்டு மாத ஷூட்டிங் முடித்துவிட்டு 1 மாதம் புரொமோஷனுக்கு தேதி கொடுத்திருக்கிறார்.

அதுமாதிரி, வருகிற ஜுன் மாதம் ஷங்கரின் மகளுக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. அதை முடித்துவிட்டு படத்தை துவங்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆக, ஷங்கர் - ராம்சரண் படமானது இன்னும் ஐந்து மாதங்கள் கழித்து தான் துவங்க இருக்கிறது. முன்கூட்டியே அறிவிப்பு வெளியாக தயாரிப்பாளர் தில் ராஜூ தான் காரணம். என்னவென்றால், தில்ராஜூவின் தயாரிப்பின் 50வது படமாக இது இருக்க வேண்டும் என்பதால் முன் கூட்டியே அறிவித்திருக்கிறார்கள்.

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

3 நிமிட வாசிப்பு

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

திங்கள் 15 பிப் 2021