மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

‘நயன்தாரா இல்லைன்னா த்ரிஷா...’ சிம்புக்காக கெளதம்மேனன் திட்டம்!

‘நயன்தாரா இல்லைன்னா த்ரிஷா...’ சிம்புக்காக கெளதம்மேனன் திட்டம்!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்துக்கு வெளியானது ஈஸ்வரன். அடுத்ததாக, வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு, ‘ஜில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘பத்து தல’ படத்தில் நடிக்கிறார்.

இப்படங்களைத் தொடர்ந்து, வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கான முதல் கட்டப் பணிகளைத் துவங்கிவிட்டார் கெளதம் மேனன். விடிவி மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து சிம்பு - கெளதம் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இது.

முதல்கட்டமாக, சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கப் போகும் நடிகை யார் என்பது குறித்த தீவிர ஆலோசனை போய்க் கொண்டிருக்காம். சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா அல்லது நயன்தாரா நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. நயன்தாரா - சிம்பு கூட்டணியில் வல்லவன் மற்றும் இதுநம்ம ஆளு படங்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் சிம்பு படத்தில் நடிக்க நயன்தாராவை படக்குழு அணுகியது. அதே வேளையில் நயன்தாரா நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்றால், இரண்டாம் வாய்ப்பாக, ஏற்கெனவே விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்த த்ரிஷாவை மீண்டும் அழைக்கவும் ஒரு பேச்சு திட்டம் இருக்காம்.

மற்றுமொரு முக்கியத் தகவல் என்னவென்றால், இந்தப் படம் நிச்சயமாக விண்ணத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்பது மட்டும் விசாரித்ததில் தெரிய வந்துள்ளது.

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

ஞாயிறு 14 பிப் 2021