கார்பரேட் கஜானா உயர... : அப்டேட் குமாரு

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மோடி, ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்’ என்ற ஒளவையின் பாடலை மேற்கோள் காட்டு பேசினார். தற்போது இந்த பாடல் தான் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளா இருக்கு. இவங்க புதுசா ஒரு பாடல் உருவாக்கியிருக்காங்க....
நைட்டு 12 மணி ஆனா பெட்ரோல் டீசல் உயர,
பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தா விலைவாசி உயர,
கேஸ் சிலிண்டர் விலை உயர,
வண்டி வாடகை உயர,
போக்குவரத்து செலவு உயர,
காய் கறி விலை உயர..
ஆக கார்பரேட் கஜானா உயரனு பாட்டு எழுதிட்டு இருக்காங்க...
நீங்க அப்டேட்ட பாருங்க
சரவணன். ℳ
வரப்புயர நீர் உயரும்...
நீர் உயர நெல் உயரும்...
நெல் உயர குடி உயரும்...
குடி உயர கோல் உயரும்...
அப்படியே இன்னும் என்னென்னலாம் விலை உயரும்னு கூட சொல்லிருக்கலாமே பிரதமர் அய்யா...!
ரஹீம் கஸ்ஸாலி
அறிவு, ஆற்றல் நிரம்பிய நகரம் சென்னை- மோடி
அதனால்தான் இங்கே தாமரை மலராதுன்னு சொல்றோம்.
நாகராஜ சோழன் MA.MLA
நமக்கு ஒரு விசயத்தை பத்தி தெரியலன்னா தெரியாதுன்னு சொல்ல மாட்டோம்
பதிலா, அப்படி ஒரு விஷயமே கிடையாதுன்னு சொல்லிடுவோம்.
Harithranidhi raja
இன்னைக்கு கல்யாண நாள் ஞாபகம் இல்லைனு சொல்றவங்கல்லாம் யாருன்னு நினைச்சே..
அன்னைக்கு காதலர்தினம் கொண்டாடின பசங்கதான்.
PrabuG
பாடலை சொல்லி முடிச்சுட்டு இதை எழுதியவர் யார்னு எடப்பாடியார்கிட்ட கேட்டிருந்தா செமயா இருந்திருக்குல..
ச ப் பா ணி
காதல் என்பது நுழைவுத் தேர்வு; திருமணம் என்பது மேனேஜ்மெண்ட் கோட்டா."
-சரவண கார்த்திகேயன்
நாகராஜ சோழன் MA.MLA
டிஜிட்டல் பணவர்த்தனை ஏழைகளுக்குமானது.- நிர்மலா சீதாராமன்.
அக்கவுண்டல மினிமம் பேலன்ஸ் மெயின்டெய்ன் பண்ணலனு இருக்கற காசையும் நீங்களே எடுத்துக்கவா???
மயக்குநன்
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண 'வெச்சு செஞ்சி' விடல்..!
-இந்த புதுக்குறள்தான் இன்றைய தேதிக்கு பொருந்தும் போல..!
Harithranidhi raja
"ஆளு" இருந்தா Valentine,
இல்லைன்னா quarantine.
அவ்வளோதான் வாழ்க்கை இதுக்கு போயி..