iசென்னை டெஸ்ட்: வலுவான நிலையில் இந்தியா!

entertainment

சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இந்தியா – இங்கிலாந்துக்கான இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி 249 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்குடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்திருந்தது.அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா, 161 ரன்கள் குவித்தார். ரகானே 67 ரன்கள் சேர்த்தார்.

இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 14) இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி, முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அக்சர் பட்டேல் 5 ரன்களிலும், இஷாந்த் சர்மா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆகினர். அரை சதம் கடந்த ரிஷப் பன்ட், தொடர்ந்து நிதானமாக ஆடினார். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் நிலைக்கவில்லை. 96ஆவது ஓவரில் குல்தீப் யாதவ் (0), முகமது சிராஜ் (4) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 329 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ரிஷப் பன்ட் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இங்கிலாந்து அணி தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஓலி ஸ்டோன் 3 விக்கெட், ஜேக் லீச் 2 விக்கெட், ஜோ ரூட் ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. முதல் ஓவரிலேயே ரோரி பேர்ன்ஸை இஷாந்த் சர்மா சாய்த்தார். அதன்பின் அஷ்வின், அக்சார் பட்டேல் சுழற்பந்து வீச்சில் அசத்த இங்கிலாந்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது.

அஷ்வின் அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட் சாய்க்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 59.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 134 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அக்சார் பட்டேல், இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

195 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய தொடங்கியது. கில் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 25 ரன்களுடனும் புஜாரா 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. 249 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது இந்திய அணி.

**-ராஜ்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *