மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 14 பிப் 2021

வெளியான கர்ணன் ஃபர்ஸ்ட் லுக்.. சிறிய பெயர் மாற்றத்துடன் பட டைட்டில்!

வெளியான கர்ணன் ஃபர்ஸ்ட் லுக்.. சிறிய பெயர் மாற்றத்துடன் பட டைட்டில்!

தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் கர்ணன் பட ரிலீஸ் தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷூக்குச் சென்ற வருடம் பட்டாஸ் திரைப்படம் வெளியானது. அதற்கு முந்தைய வருடமான 2019-ல் அசுரன், எனை நோக்கிப்பாயும் தோட்டா படங்கள் வெளியானது. இதில் அசுரன் மட்டுமே தனுஷூக்கு பெரியளவில் ஹிட்டாக அமைந்த படம்.

வருடத்திற்கு இரண்டு படம் என்பதில் தெளிவாக இருப்பவர் தனுஷ். கடந்த 2020-ல் பட்டாஸ் படத்தோடு வெளியாகியிருக்க வேண்டிய மற்றுமொரு படம் ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ளது. சென்ற வருடமே நேரடியாக திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டியது, இந்த வருட மார்ச்சில் ஓடிடியில் வெளியாகிறது.

இந்நிலையில், தனுஷூக்கு அடுத்ததாக திரையரங்கத்தில் வெளியாகத் தயாராக இருக்கும் படம் ‘கர்ணன்’. பரியேறும் பெருமாள் படத்தினைக் கொடுத்த மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. அசுரனைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

கர்ணன் படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழு ஏற்கெனவே முடிவெடுத்திருந்த நிலையில், படத்தை ஏப்ரல் 09-ஆம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. அதோடு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

தனுஷூக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார். முக்கிய ரோலில் லால் நடித்திருக்கிறார். மாஞ்சோலை பிரச்னையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருக்காம்.

படத்துக்கு "தனுஷ் கர்ணன்" என பெயரிடப்பட்டுள்ளது. ஏனெனில், சிவாஜி நடிப்பில் கர்ணன் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. அதான், இந்தப் படத்துக்கு அந்த டைட்டில் கிடைக்கவில்லை. அதனால், "தனுஷ் கர்ணன்" என பெயரிட்டுள்ளனர்.

தொடர்ந்து, கார்த்திக் நரேன் நடிப்பில் ‘தனுஷ் 43’, அக்‌ஷய்குமாருடன் நடித்த பாலிவுட் படமான அட்ராங்கி ரே படங்களும் இந்த வருட ரிலீஸில் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, ரூஸோ சகோதரர்களின் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸூக்கு நடிக்கும் ‘க்ரே மேன்’ படங்களும் லைன் அப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

ஞாயிறு 14 பிப் 2021