மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

பொன்னியின் செல்வன் ரிலீஸில் புதிய முடிவுடன் மணிரத்னம்

பொன்னியின் செல்வன் ரிலீஸில் புதிய முடிவுடன் மணிரத்னம்

மணிரத்னத்தின் மிகப்பெரிய கனவுத்திட்டம் ‘பொன்னியின் செல்வன்’. சீக்கிரமே கனவு நினைவாகப் போகிறது. ஏனெனில், பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

எழுத்தாளர் கல்கியின் புகழ்மிக்க நாவலான பொன்னியின் செல்வனை மையமாகக் கொண்டு திரைப்படத்தை உருவாக்கிவருகிறார் மணிரத்னம். இந்தப் படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா , சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். மிகப்பெரிய பொருட்செலவுடன் படம் தயாராகிவருகிறது. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துவருகிறார் மணிரத்னம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பரில் தாய்லாந்தில் துவங்கியது. அதன்பிறகு சில நாட்கள் பாண்டிச்சேரியிலும், சென்னையிலும் நடந்தது. அதன்பிறகு பொருளாதார சிக்கலினால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு நடத்தமுடியாத சூழல். எல்லா போராட்டத்தையும் தாண்டி, கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்துவருகிறது. படத்தின் பெரிய நடிகர்கள் பணியாற்றியிருப்பதால் அனைவரின் தேதியையும் பெற்று படமாக்குவது நிச்சயம் சவாலான ஒன்று தான். அதையும் தாண்டி படப்பிடிப்பை நடத்திவருகிறார். படத்தின் முக்கால் பாகத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் படமானது இரண்டு பாகங்களாக உருவாகிறது. இரண்டு பாகத்திற்குமானப் படப்பிடிப்பையும் சேர்த்தே முடிக்கிறாராம் . அதோடு, புது அப்டேட் என்னவென்றால், இரண்டு பாகத்தையும் குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து வெளியிட இருக்காராம் இயக்குநர் மணிரத்னம். கிடைத்திருக்கும் லேட்டஸ்ட் தகவல் படி, முதல் பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் உடன் நிறைவடையும். அதுபோல, இரண்டாம் பாகத்திற்கானப் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடித்துவிடவும் திட்டமாம். எப்படியும் ஆறு மாத இடைவெளிக்குள் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

ராஜமெளலியின் பாகுபலியின் இரண்டு பாகங்களுமே ஒன்றரை வருட இடைவெளியில் தான் வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷ் நடிக்கும் கே.ஜி.எஃப் முதல் பாகம் 2018ல் வெளியானது. தற்பொழுது இரண்டாம் பாகம் இந்த வருடம் வெளியாகிறது. பொதுவாக பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் குறைந்த கால இடைவெளியில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி போல இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகிறதாம். எப்படியும் படத்தின் பட்ஜெட் 500 கோடியைத் தொடும் என்கிறார்கள். ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பெரிய ஹீரோ படங்கள் பெஸ்டிவல் தினங்களை துண்டு போட்டு முன்னாடியே பிடித்து வைத்திருப்பதால், முதல் பாகத்தை வெளியிட கச்சிதமான ரிலீஸ் தேதியை பார்த்துவருகிறதாம் படக்குழு.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

சனி 13 பிப் 2021