மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

எடப்பாடியார் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்:அப்டேட் குமாரு

எடப்பாடியார் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்:அப்டேட் குமாரு

நம்ம மாணவ தம்பி ஒருத்தர் வாட்ஸ் அப் அனுப்பியிருந்தாரு. திமுக ஆட்சிக்கு வந்ததும் கல்விக் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் சொல்லியிருக்காரு. இதை எடப்பாடியார் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்னு சொல்லி அந்த மெசேஜை அனுப்பியிருந்தாப்ல. இதுக்கு மேல எதுவும் சொல்ல வேண்டியதுல்ல. நீங்களும் இதை எடப்பாடியார் கண்ணில் படும் வரை ஷேர் செய்யவும்!

மாஸ்டர் பீஸ்

சரியான நேரத்தில் கேட்கப்படும் மன்னிப்பு என்ன செய்யும்!

காயத்தின் ரணத்தின் மீது சற்று இதமாக மருந்தள்ளி பூசும்!!!

நாகராஜ சோழன் MA.MLA

ஜி~

தமிழ்நாட்டுல நிலவரம் எப்படி இருக்கு ஓவர்...ஓவர்....

நடு வானத்துல இருந்தே அடிக்கல் நாட்டுரது தான்

நல்லது ஓவர்...ஓவர்....

James Stanly

இருங்கடா.. எங்க Koo வுல Welcome modi Trend பண்ணுறோம்..

அட கிறுக்கா.. #GoBackModi ஆரம்பிச்சதே அங்கதான்டா..

balebalu

சமையல் எண்ணெய் விலை அதிகம் ஆனது : செய்தி

ஓஹோ ! அதான் வாயில வடை சுடுறுவங்க எண்ணிக்கை அதிகமாகிடுச்சோ ?

harithranithi raja

பக்கத்து வீட்டில் சண்டை ரேடியோவின் சத்தத்தை குறைத்தாள் மனைவி.

உலக_வானொலி_தினம்

PrabuG

பிரச்சனை இப்ப என்னன்னா, ஒரு புள்ளைக்கு சாக்லேட்டும் கிஸ்ஸும் தந்தாச்சு. இன்னொரு புள்ளைக்கிட்ட அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு ப்ராமிஸ் பண்ணி நாலு டெடி பியரும் கொடுத்தாச்சு.

நாளைக்கு ரெண்டு பேரும் மீட் பண்ண சொல்லுறாங்க

தர்மஅடி தர்மலிங்கம்

விவசாயிகளின் போராட்டம் களங்கம் அற்றதாக இருக்க வேண்டும்;- பிரதமர் மோடி.

அதுக்காக தான் ரோட்டுல 'ஆணி' அடிச்சிருக்கா ஜீ....

balebalu

இட்லி விலை தான் கோடி கணக்கில் என்று பார்த்தால் செங்கல் விலை 12 கோடியாம் !Person walking

மதுரை எய்ம்ஸ்

மயக்குநன்

எம்ஜிஆரின் மறுவடிவாக மோடியை தமிழக மக்கள் பார்க்கிறார்கள்!- எல்.முருகன்.

அம்'மோடி'யோவ்..!

-லாக் ஆப்

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 13 பிப் 2021