மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

இரண்டு இளம் இயக்குநர்களில் ரஜினியை இயக்கப் போவது யார்?

இரண்டு இளம் இயக்குநர்களில் ரஜினியை இயக்கப் போவது யார்?

ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. அஜித்துக்கு வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என நான்கு வெற்றிப் படங்களைக் கொடுத்த சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவருகிறார். ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்திசுரேஷ் மற்றும் நயன்தாரா நடித்துவருகிறார்கள். எமோஷனல் ஃபேமிலி டிராமாவாக படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே 60% முடிவடைந்துவிட்ட நிலையில், கடந்த டிசம்பரில் படப்பிடிப்பை துவங்கியது. படப்பிடிப்புத் தளத்தில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருந்ததால், படப்பிடிப்பை நிறுத்தியது படக்குழு. புதிய அப்டேட் படி, ஏப்ரலில் படப்பிடிப்பை துவங்க திட்டமாம். ரஜினியின் காட்சிகள் ஜூன் மாதம் துவங்கலாம் என்கிறார்கள். எது எப்படியோ, தீபாவளிக்கு திரைக்கு வருவதை உறுதி செய்திருக்கிறது படக்குழு.

இந்நிலையில், ரஜினியின் அடுத்தப் படத்தை யார் இயக்க இருக்கிறார் என்ற பரபரப்புக்குள் வந்துவிட்டது கோலிவுட். ஏனெனில், ஒரு பெரிய ஹீரோவுக்கு அடுத்தப் பட இயக்குநர் யாரென்று உறுதியாவதற்குள் ஒரு பெரிய பட்டியலே வெளியாகும். இந்த லிஸ்டில் முதலாவதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பெயர் சமீபத்தில் அடிபட்டது. ரஜினியை பேட்ட படத்தில் இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். அந்தப் படம் ரஜினிக்கு பிடித்துப் போனதால், மீண்டும் வாய்ப்புக் கொடுப்பதாக ஒரு தகவல் நிலவியது. இந்நிலையில், மற்றுமொரு புதிய பெயரும் இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறது.

துல்கர் சல்மான் , ரீத்துவர்மா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கினார். ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநரை நேரில் அழைத்துப் பேசினார் ரஜினிகாந்த் என்பதும் நினைவுக்கூறத்தக்கது.

சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை ஒன்றை சொல்லியிருக்கிறார் தேசிங்கு பெரியசாமி. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. சமீப காலமாகவே இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்துவருகிறார் ரஜினி. அதனால், கார்த்திக் சுப்பராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி இருவரில் யார் அடுத்து ரஜினியை இயக்க இருக்கிறார் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

சனி 13 பிப் 2021