மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

ஏன் இப்படி செய்தார் ? மிஷ்கின் மீது வருத்தத்தில் ஒளிப்பதிவாளர்கள்!

ஏன் இப்படி செய்தார் ? மிஷ்கின் மீது வருத்தத்தில் ஒளிப்பதிவாளர்கள்!

மிஷ்கின் இயக்கத்தில் சென்ற வருடம் வெளியான சைக்கோ நல்ல வரவேற்பைப் பெற்றது. உதயநிதி பார்வை சவால்கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாயகியாக அதிதிராவ், நித்யா மேனன் நடித்திருந்தார்கள். குறிப்பாக, படத்தில் இளையராஜா இசையில் பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்பொழுது மிஷ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிசாசு 2. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் டி.முருகானந்தம் இப்படத்தைத் தயாரிக்கிறார். பிசாசுவாக ஆண்ட்ரியா நடிக்கிறார். படத்தில் முக்கிய ரோலில் பூர்ணா நடிக்கிறார். ஏற்கெனவே, இவரின் சவரக்கத்தி படத்தில் பூர்ணா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவுக்கு பதில் இந்த முறை, கார்த்திக் ராஜாவை தேர்ந்தெடுத்திருக்கிறார் மிஷ்கின்.

பிசாசு 2வின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் துவங்கி நடந்துவருகிறது. இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக லண்டனைச் சேர்ந்த சிவசாந்தக் குமார் பணியாற்றிவருகிறார். யார் இந்த சிவசாந்த குமார் என விசாரித்தால் புதிய தகவல் கிடைக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்துக்கான படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. அப்போது விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் கருத்துமோதல் ஏற்பட்டது. லண்டனில் மிஷ்கின் தங்கியிருந்த அறைக்கான வாடகை கூட செலுத்தப்படவில்லை. போலீஸ் வழக்கு வரை சென்றது. விஷாலை திட்டித்தீர்த்தார் மிஷ்கின். துப்பறிவாளன் 2விலிருந்து வெளியேறினார். மிஷ்கின் லண்டனில் சிக்கலில் இருந்த போது அவருக்கு உதவியவர் தான் இந்த சிவசாந்தக் குமார். இவர் வீட்டில் தான் மிஷ்கின் தங்கியிருந்தார் . அதற்கு பதில் உதவியாக லண்டனில் ஒளிப்பதிவாளராக இருந்த சிவசாந்த குமாரை பிசாசு 2 படத்துக்கு அழைத்துவந்தார் மிஷ்கின்.

இப்போது சிக்கல் என்னவென்றால், தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற வேண்டுமென்றால் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். அப்படி ஒளிப்பதிவாளர் சங்கத்தில் உறுப்பினராகாமல் பணியாற்றி வருகிறாராம் சிவசாந்தக் குமார். ஏன் மிஷ்கின் இப்படி செய்கிறார் என அவர் மீது வருத்தத்தில் இருக்கிறது ஒளிப்பதிவாளர் சங்கம். இதை மிஷ்கின் உணர்ந்து, அவருக்கு சங்க உறுப்பினர் அட்டை பெற்றுத் தரவில்லையென்றால் பிசாசு 2, ரிலீஸின் போது சிக்கல் வரும் என்று சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

சனி 13 பிப் 2021