மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 13 பிப் 2021

ஏமாற்றத்தைச் சந்தித்த திரையரங்குகள்: ஷாக்கிங் ரிப்போர்ட்!

ஏமாற்றத்தைச் சந்தித்த திரையரங்குகள்: ஷாக்கிங் ரிப்போர்ட்!

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் திரையுலகம் மீண்டுவருகிறது. குறிப்பாக, திரையரங்க அனுமதி கொடுக்கப்பட்டும் மந்தமான சூழல் நிலவி வந்தது. அப்படி 50% இருக்கை அனுமதியின் போதே, விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் தியேட்டரில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் திரையரங்குகளுக்கு பெரிய புத்துயிர்ப்பைக் கொடுத்தது. நினைத்ததை விட பல கோடிகளுக்கு வியாபாரமும், லாபமும் பார்த்தனர் திரையரங்கத்தினர். கூடுதலாக, சிம்புவின் ஈஸ்வரன் படமும் ரசிகர்கள் திரையரங்குகளுக்குத் தொடர்ச்சியாக வருவார்கள் எனும் நம்பிக்கையை ஊட்டியது என்பதே உண்மை.

மாஸ்டர், ஈஸ்வரன் ரிலீஸூக்குப் பிறகு, சிபிராஜ் நடிப்பில் கபடதாரி படம் வெளியானது. அந்தப் படம் ஓரளவு திரையரங்கில் ஓடியது. அதற்கு அடுத்த வாரமான பிப்ரவரி 05ஆம் தேதி அருள்நிதி, ஜீவா நடிப்பில் ‘களத்தில் சந்திப்போம்’ படம் வெளியானது. இந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு தான்.

பொங்கல் ஸ்பெஷலாக மாஸ்டர் வெளியானதற்குப் பிறகு, திரையரங்கத்தினரின் அடுத்த டார்கெட் காதலர் தினத்துக்கு வெளியாகும் பெரிய படங்கள் தான். பெரிய வசூலை எதிர்பார்த்தனர் திரையரங்கத்தினர். அப்படி, இந்த பிப்ரவரி 12ஆம் தேதிக்கு எக்கச்சக்கப் படங்களின் அறிவிப்பு வெளியாகி, இறுதியாக நான்கு படங்கள் மட்டுமே தியேட்டரில் வெளியாகியுள்ளது.

வேல்ஸ் நிறுவன தயாரிப்பில் கெளதம் மேனன், வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி, விஜய் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அதிதிபாலன், ஆண்ட்ரியா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆந்தாலஜியாக உருவாகியிருக்கும் ‘குட்டி ஸ்டோரி’, சந்தானம் நடிப்பில் ஏ1 இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் ‘பாரிஸ் ஜெயராஜ்’, தெலுங்கில் ஹிட்டான கேர் ஆஃப் காஞ்சரபாளம் படத்தின் தமிழ் ரீமேக்கான ’கேர் ஆஃப் காதல்’ மற்றும் தினேஷ் நடிப்பில் நானும் சிங்கிள் தான் படங்கள் வெளியானது. ஆனால், திரையரங்கத்திற்கு எதிர்பார்த்த ரசிகர்கள் கூட்டம் வரவில்லை என்றே டிரேடிங் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. நேற்று சில ஊர்களில் ஷோக்களை கேன்சல் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறதாகவும் ஒரு தகவல்.

பெரியளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிய ஏமாற்றத்தை மட்டுமே திரையரங்கங்கள் பெற்றிருக்கிறது. மற்றுமொரு தகவலாக, சில்லுக்கருப்பட்டி இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் உருவான ஏலே படமும் பிப்ரவரி 12ஆம் தேதியான நேற்று தான் வெளியாகியிருக்க வேண்டும். திரையரங்கத்தினர் உடன் ஏற்பட்ட சிக்கலால், நேரடியாக டிவியில் போவதாக அறிவிப்பு வெளியானது.

நாம் என்னதான் சிக்கல் கொடுத்தாலும், மீண்டும் நம்மிடம் தான் வரவேண்டும் என நினைத்தார்கள் திரையரங்கத் தரப்பினர். ஆனால், விஜய் டிவியில் நேரடி ஒளிபரப்புக்கு சென்றது ஏலே. ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்த படமும் இதுதான். இந்தப் படம் தியேட்டர் ரிலீஸை இழந்தது, திரையரங்கிற்கும் இழப்புதான் என்றே சொல்கிறார்கள்.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

சனி 13 பிப் 2021