மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

ரஜினிக்கு சொன்ன கதை, விஜய் நெக்ஸ்ட்... கெளதம் மேனன் !

ரஜினிக்கு சொன்ன கதை, விஜய் நெக்ஸ்ட்... கெளதம் மேனன் !

நடிகராகவும் இயக்குநராகவும் கவனத்தை ஈர்த்துவருகிறார் இயக்குநர் கெளதம் மேனன். குறிப்பாக, இவர் இயக்கும் ஓடிடி தள ஆந்தாலஜிகளில் அவரே நடித்தும் வரவேற்பை சமீபகாலமாகப் பெற்று வருகிறார். நெட்ஃப்ளிக்ஸில் பாவக்கதைகள் ஆந்தாலஜியில் சிம்ரனுடன் நடித்தவர், அடுத்ததாக குட்டி ஸ்டோரி எனும் ஆந்தாலஜியிலும் நடித்திருக்கிறார். ‘குட்டி ஸ்டோரி’ திரையரங்கில் இன்று வெளியாகியிருக்கிறது. அதோடு, கெளதம் மேனன் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.

சமீபத்தில், கெளதம் மேனன் கொடுத்த நேர்காணல் இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதில் சில சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். விஜய்க்கு நெருக்கமான அசோசியேட் ஒருவர் கெளதமை போனில் அழைத்து விஜய்க்கு கதை எழுதுமாறு கேட்டிருக்கிறார். பொதுவாக, படத்துக்கு க்ளைமேக்ஸ் எழுதும் பழக்கம் கெளதமிற்கு கிடையாது. அந்த ஒரு காரணத்தினால் ‘காக்க காக்க’ படத்தில் நடிப்பதை மறுத்தார் விஜய். அந்த வாய்ப்பு விஜய்யின் நண்பர் சூர்யாவுக்கு கிடைத்தது. படமும் சூர்யாவுக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தது.

மீண்டும் விஜய் - கெளதம் கூட்டணியில் ‘யோகன்; அத்யாயம் ஒன்று’ இணைய இருந்தது. சில பல காரணத்தினால் அந்தக் கூட்டணி இணையவில்லை. தற்பொழுது விஜய் தரப்பிலிருந்தே கெளதமை ஸ்கிரிப்ட் தயார் செய்யக் கூறியிருக்கிறார்கள். இந்த முறை க்ளைமேக்ஸோடு ஸ்கிரிப்ட் எழுத சொல்லியிருக்கிறார்களாம். ஏனெனில், படத்தில் ஒப்பந்தமாகும் முன்பு, முழு கதையையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் நடிகர் விஜய். இந்த வருட இறுதிக்குள் கெளதம் - விஜய் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை எதிர்பார்க்கலாம்.

2001ல் வெளியான மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கெளதம். 20 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், இயக்குநராக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த போது, அவர் மனதில் முதலில் இருந்தது காக்க காக்க படத்திற்கான கதை தானாம். ஆனால், முதலில் மின்னலே படத்திற்கான வாய்ப்பு வந்திருக்கிறது.

ரஜினி குறித்தும் ஒரு சுவாரஸ்யத்தை கட்டவிழ்ந்திருக்கிறார். முதன்முறையாக துருவநட்சத்திரம் படத்திற்கானக் கதையை ரஜினிக்கும், தயாரிப்பாளர் தாணுவுக்கும் தான் கூறியிருக்கிறார் கெளதம் மேனன். ரஜினிக்கு இவர் சொன்ன ஸ்கிரிப்ட் பிடித்திருந்த போதிலும், சில காரணங்களால் படமானது துவங்க வில்லை. பிறகு, அந்த வாய்ப்பு விக்ரமுக்கு வர, துருவநட்சத்திரம் தற்பொழுது ரிலீஸூக்கு ரெடியாகிவருகிறது. அதோடு, கெளதம் இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க, சிம்புவுடன் விடிவி 2 படங்கள் கைவசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

-ஆதினி

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

வெள்ளி 12 பிப் 2021