மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

ஊத்திக் கொடுத்தது யாரு? அப்டேட் குமாரு

ஊத்திக் கொடுத்தது யாரு?   அப்டேட் குமாரு

தமிழ்நாட்டோட ரொம்ப முக்கியமான தேர்தல் பிரச்சினை என்னானு கேட்டா யாருக்கு யார் ஊத்திக் கொடுத்ததுங்குறதுதான். ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவரா இருந்த விஜயகாந்துக்கும் முதலமைச்சரா இருந்த ஜெயலலிதாவுக்கும் இதே தலைப்புல விவாதம் நடந்துச்சு. இப்ப அமைச்சர் சண்முகத்துக்கும் டிடிவி தினகரனுக்கும், இடையில நடக்குது. நாட்ல ஆயிரம் பிரச்சினை இருக்கும்போது அவங்கவங்க பிரச்சினை அவங்களுக்கு. தேர்தலுக்குள்ள இன்னும் என்னென்ன விவாதமெல்லாம் நடக்கப் போகுதோ... காதுக்குப் பஞ்சு கொடுக்குறவங்களுக்குத்தான் நான் ஓட்டுப் போடுவேன். நீங்க அப்டேட் பாருங்க

Siva_Ks

திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் - மு.க.ஸ்டாலின்

எடப்பாடி : அடுத்து என்னப்பா கல்விக்கடன தள்ளுபடி பன்னிடலாமா ?

மெத்த வீட்டான்

சென்னை விமான முனையங்களில் அண்ணா - காமராசர் பெயர் நீக்கம் #

இது பாமகவுக்கு கிடைத்த வெற்றியா இல்ல அதிமுகவுக்கு கிடைத்த வெற்றியா ?

பாலசுப்ரமணி

ஏன்டா டிவிட்டரை தடை பண்ணப் போறாங்களே கவலை இல்லையா உனக்கு?

"நான் ஏன்ணே கவலைப் படணும். நிறைய பாலோவர்ஸ் தேத்தி வச்சுருக்கும் பேக் ஐடி தானே கவலைப் படனும்"

ரஹீம் கஸ்ஸாலி

ஜெயிச்சால் எப்படி கொண்டாடுவது என்பதைவிட, தோற்றால் எப்படி சமாளிப்பது என்பதில்தான் அதிகம் மெனக்கெடுகிறார்கள்.

பர்வீன் யூனுஸ்

சச்சினுடய bat பேசிய போது கைதட்டி ஆர்ப்பரித்தோம். இப்போது அவர் வாய் பேசும் போது, கை தட்டி சிரிக்கிறோம்.

தர்மஅடி தர்மலிங்கம்

எம்.பி சீட் கொடுத்தால் கட்சியில் இணைய தயார் - சந்தானம்!!

'எம்.பி.பி.எஸ்' சீட் கேட்காம விட்டுடீங்களே தலைவரே!

நாகராஜ சோழன் MA.MLA

திமுகவைபோல அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை.- முதல்வர் பழனிச்சாமி.

ஆமா....

இது O.P.S மகன் ரவீந்திரநாத் மேல சத்தியம்...

James Stanly

Huggies கழட்டிட்டா ஒழுங்கா ஒன்னுக்கு போவ தெரியாது.. இதுக்கு வாட்சப் ஸ்டேட்டஸ் Happy Hugs Day யாம்..

ச ப் பா ணி

ஒரு லிட்டர் டீசல் விலை 34 காசுகள் உயர்ந்தும்,

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசு அதிகரித்தது

கடைக்காரன்னே..பைக் இங்கிருக்கு..ஆள் எங்கனு கேட்டா நடந்து போயிருக்காருனு சொல்லிருங்க

சரவணன். ℳ

பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் அக்கவுண்ட்டில் ரூ.18,000 வரவு வைக்கப்படும்: அமித் ஷா

மைனஸ்ல தானே...?

மயக்குநன்

அதிமுகவைச் சேர்ந்த தொண்டன் கூட இனி முதல்வராக முடியும்!- முதல்வர் பழனிசாமி.

ஆனா... நீங்க மட்டும்தான் முதல்வர் வேட்பாளராக முடியும், அப்படித்தானே..?!

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 12 பிப் 2021