மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 12 பிப் 2021

நீண்ட மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் நான்கு படங்கள் ரிலீஸ் !

நீண்ட மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் நான்கு படங்கள் ரிலீஸ் !

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் எக்கச்சக்கப் படங்கள் வெளியாகும். கொரொனா அச்சுறுத்தலுக்குப் பிறகு திரையரங்கம் திறக்க அனுமதி கிடைத்தும் ஒன்றிரண்டு படங்களே வாரத்துக்கு வெளியாகிவந்தன. பொங்கல் தினத்துக்கு மாஸ்டரும் ஈஸ்வரனும் வெளியானதுக்குப் பிறகு நிலைமை சகஜத்துக்கு வந்துவிட்டது. சொல்லப்போனால், 11 மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் அதிகபட்சமாக 4 படங்கள் இன்று வெளியாகியிருக்கிறது.

01) பாரிஸ் ஜெயராஜ்

சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பிஸ்கோத், டகால்டி படங்கள் பெரிதளவு கைகொடுக்கவில்லை. சந்தானத்தின் மிகப்பெரிய நம்பிக்கை பாரிஸ் ஜெயராஜ். ஏ1 பட இயக்குநர் ஜான்சன் தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

ஏ1 பெரிய ஹிட்டென்பதால் இந்தப் படம் பெரிய விலைக்கு விற்பனையானது. சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ரிலீஸூக்கு முன்பே நல்ல வரவேற்பைப் பெற்றது. வடசென்னை கானா பாடகராக சந்தானம் நடித்திருக்கிறார். அனிகா , சஷ்டிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

2) குட்டி ஸ்டோரி

ஓடிடிக்கு திட்டமிட்டு திரையரங்க ரிலீஸாகியிருக்கும் ஆந்தாலஜி படம் குட்டி ஸ்டோரி. காதலர் தினத்துக்கான பெஸ்ட் ரொமாண்டிக் டிராமா இது. மொத்தம் நான்கு கதைகளை, நான்கு இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். கெளதம் மேனன், ஏ.எல்.விஜய், நலன் குமாரசாமி மற்றும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்சேதுபதி, அமலாபால், ஆண்ட்ரியா, ஆர்யா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

3) கேர் ஆஃப் காதல்

தெலுங்கு சினிமான்னாலே ஆக்‌ஷனும், மாஸூம் தான் என்கிற வழக்கத்தை உடைத்தெறிந்த படம் 'கேர் ஆஃப் காஞ்சரபாளம்' . 2018ல் வெங்கடேஷ் மஹா இயக்கத்தில் வெளியாகி பெரிய ஹிட்டானது. தெலுங்கு சினிமாவின் டிரெண்ட் செட்டிங் சினிமா என்றே சொல்லலாம். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தான், இன்று வெளியாகியிருக்கும் ‘கேர் ஆஃப் காதல். தெலுங்கில் இசையமைத்த Sweekar Agasthi தமிழிலும் இசையமைத்திருக்கிறார். காதலர் தினத்துக்கான ஃபீல் குட் திரைப்படமாக இருக்கும்.

04) நானும் சிங்கிள் தான்

தினேஷ், தீப்தி சதி, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ' நானும் சிங்கிள் தான்'. கோபி எனும் அறிமுக இயக்குநரின் படம். முழுக்க முழுக்க காமெடி காதல் படமாக இருக்கும் என்கிறார்கள்.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வெள்ளி 12 பிப் 2021