மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

சூர்யாவின் உடல்நிலை குறித்து தம்பி கார்த்தி ட்விட்!

சூர்யாவின் உடல்நிலை குறித்து தம்பி கார்த்தி ட்விட்!

உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். எளிய மனிதர்கள் முதல் நாட்டின் முக்கிய தலைவர்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை. பெரும் அச்சுறுத்தலாக கண்முன் இருக்கும் கொரோனாவின் பிடியிலிருந்து திரைப் பிரபலங்களும் தப்பவில்லை.

இந்தியாவில் பல்வேறு நடிக நடிகைகள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமீபமாக சூர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அவரே ட்விட்டர் மூலம் அறிவித்தார். தீவிர காய்ச்சலினால் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்த நிலையில், நடிகரும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சூர்யாவின் உடல்நிலைக் குறித்துக் கூறியுள்ளார். அதில் " அண்ணா பாதுகாப்பாக வீடு திரும்பினார், எல்லாம் நலம். இன்னும் சில நாட்களுக்கு ஹோம் குவாரண்டைனில் இருக்கப் போகிறார். உங்களின் பிரார்த்தனைக்கு எப்படி நன்றி சொல்வதென தெரியவில்லை" என்று கூறியுள்ளார்.

சூர்யாவுக்கு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று படம் பெரியளவில் ஹிட்டானது. கடந்த ஜனவரியில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். வக்கீல் ரோலில் வருகிறாராம். இதற்கான படப்பிடிப்பை முடித்துவிட்டார். அடுத்தக் கட்டமாக உடல்நிலை சரியானதும் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் 'சூர்யா 40' படத்தில் நடிக்க இருக்கிறார். இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் சிவா இயக்கத்தில் நடிக்கும் படம் லைன் அப்பில் இருக்கிறது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

வியாழன் 11 பிப் 2021