மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 பிப் 2021

வலிமை ஹூட்டிங் எப்போது முடிகிறது? அப்டேட் சொன்ன போனிகபூர்

வலிமை ஹூட்டிங் எப்போது முடிகிறது? அப்டேட் சொன்ன போனிகபூர்

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் வலிமை. இந்தப் படத்தின் அப்டேட் கேட்டு கதறி வருகிறார்கள் ரசிகர்கள். ஆனால், எந்த வித அதிகாரப்பூர்வ அப்டேட்டும் சொல்லாமல் படக்குழு மெளனம் காத்துவருகிறது. ஆனால், யுவன் ஷங்கர் ராஜா மட்டும் அவ்வப்போது எதாவது ஹிண்ட் கொடுத்துக் கொண்டுவருகிறார். அதனால், அஜித் ரசிகர்கள் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள்.

அப்படி, வலிமை படத்தின் இண்ட்ரோ பாடலை யுவன் முடித்துவிட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நேற்று வெளியானது. ஏற்கெனவே அஜித்தின் இண்ட்ரோ பாடலை யுவன் பாடுகிறார் என்று நம்முடைய தளத்தில் கூறியிருந்தோம். அதுமாதிரியே யுவனும் அஜித்துக்கான ஸ்பெஷலான பாடலை முடித்துவிட்டார். அதோடு, துள்ளலிசைப் பாடலாக ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என்றும் யுவன் கூறியுள்ளார்.

மற்றுமொரு கூடுதல் தகவல் என்னவென்றால், மாஸ்டர் படத்துக்காக புதுப்புது இசைக் கலைஞர்களை அனிருத் அழைத்து வந்து அறிமுகம் செய்தது போல, வலிமை படத்திற்காக ஒடிசாவில் திருவிழாக்களுக்கு வாசிக்கும் ட்ரம்ஸ் இசைக் கலைஞர்களை இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்காராம் யுவன்.

இந்நிலையில், இன்றும் வலிமை குறித்த புது அப்டேட் வந்திருக்கிறது. அதை, படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரே கூறியுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், “ வலிமை படத்துக்கான படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி 15க்குள் முடிவடையும். கூடுதலாக, ஒரு சண்டைக் காட்சியை மட்டும் வெளிநாட்டில் படமாக்க வேண்டும். சீக்கிரமே போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் துவங்க இருக்கிறோம். ரிலீஸ் தேதியை இன்னும் உறுதி செய்யவில்லை. சீக்கிரமே இறுதி செய்யப்பட உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படமே வலிமை. அஜித்தோடு காலா நாயகி ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். முன்னதாக, வலிமை படமானது மே 1ஆம் தேதி அஜித் பிறந்த தின ஸ்பெஷலாக வெளியாகும் என்று சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- தீரன்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வியாழன் 11 பிப் 2021