கொரோனா பாசிட்டிவ் என சூர்யா வெளிப்படையாகச் சொல்ல காரணம் !

entertainment

நடிகர் சூர்யா கடந்த 7ஆம் தேதி ஒரு ட்விட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் ’கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

சூர்யாவுக்கு கொரோனா எனும் செய்தி பரபரப்பானது. ஆரோக்கியமான மனிதர். தீவிரமான உடற்பயிற்சி மேற்கொள்பவர். கொரோனா முன்னெச்சரிக்கையை தவறாது கடைபிடிப்பவருக்கு எப்படி கொரோனா தொற்று என இணையத்தில் பலரும் வருத்தம் தெரிவித்துவந்தனர். எப்படி சூர்யாவுக்கு கொரோனா வந்திருக்கலாம் என விசாரித்தால், சூர்யாவின் குழந்தைகள் மகாராஷ்டிராவில் இருக்கும் பாட்டி வீட்டில் இருக்கிறார்கள். அவர்களைச் சென்று பார்த்துவிட்டு திரும்பியிருக்கார் சூர்யா. தற்பொழுது கொரோனா 2.0 அந்த பகுதிகளில் அதிகமாக பரவி வருவதாகச் சொல்லப்படுகிறது. இது ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.

அதோடு, ஐஸ்வர்யா ராய், தமன்னா, விஷால் உள்ளிட்ட குறைவான எண்ணிக்கையிலான நடிகர்களே தங்களுக்கு கொரோனா இருப்பதை வெளிப்படையாகச் சொன்னார்கள். ஆனால், தமிழிலேயே நிறைய பிரபலங்களுக்கு கொரோனா வந்திருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது. யாரும் வெளியில் சொல்லவில்லை. இந்நிலையில், சூர்யா வெளிப்படையாகச் சொல்லவும் காரணம் இருக்காம். கொரோனா அச்சம் மக்கள் மத்தியில் இல்லை. பெரும்பாலும் மக்கள் முகக் கவசம் இன்றி, சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், இன்னும் கொரோனா அச்சுறுத்தல் தொடருவதை வலியுறுத்தும் விதமாக தான், அத்தனை பாதுகாப்பாக இருக்கும் எனக்கே கொரோனா வந்துவிட்டது. உஷாராக இருங்கள் என்பது போன்று ட்விட் பதிவிட்டாராம் சூர்யா.

அதோடு, சூர்யாவுக்கு கொரோனா என்பதால், அவரின் தந்தை சிவக்குமாரும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

*-ஆதினி**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *