மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

குலாமுக்கே குல்லாவா? அப்டேட் குமாரு

குலாமுக்கே குல்லாவா? அப்டேட் குமாரு

குலாம் நபி ஆசாத்துக்காக மோடி விட்ட கண்ணீர் தான் இன்னிக்கி இந்திய அரசியல்லயே பெரிய பேச்சா இருக்கு. குலாமுக்கு மோடி குல்லா போட்டுட்டாரா அப்படின்னு காங்கிரஸ் கட்சிக்கு உள்ள ஒரு குரலும் கேட்குது. எது எப்படியோ அரசியலுக்கும் கண்ணீருக்கும் ஏகப்பட்ட சம்பந்தம் இருக்கு. அண்ணா காலத்தில இருந்து அம்மா காலம் வரைக்கும் தமிழ்நாட்டு அரசியலில் ஏகப்பட்ட கண்ணீர் கதைகள் இருக்கு மோடிஜி.

செந்திலின்_கிறுக்கல்கள்

வரும் சட்டமன்றத்தேர்தலில்இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன் -தினகரன் # அதிமுகல ஒன்னு அமமுகல ஒன்னா ப்ரோ?!

பர்வீன் யூனுஸ்

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை யார் ஆளப்போகிறார் என்பதை, நமது ஐந்து விரல்களுக்குள் ஒன்றில் வைத்திருக்கிறோம்.

நாகராஜ சோழன் MA.MLA

கூட்டணி என்ற வார்த்தையே தமிழில் எனக்குப் பிடிக்காது!- பிரேமலதா.

அப்பறம் எதுக்கு எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு அப்படின்னு சொல்றீங்க? 234 தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்க வேண்டியது தானே!!!

கடைநிலை ஊழியன்

நாம் இந்த இணையத்தில் எவ்வளவு அடிமையாக இருக்கிறோம் என்று உணரும் நொடி, internet disconnection ஆகும் போதும், internet slow வா இருக்கும் போதும்..

அவ்ளோ tension ஆகுது !!

கோழியின் கிறுக்கல்!!

மகன் வந்து மருத்துவரிடம் அழைத்து வந்தாலே,

முக்கால்வாசி நோய் குணமாகி விடுகிறது முதியப் பெற்றோருக்கு!!

ச ப் பா ணி

Leave letter எழுத மறந்து போன தலைமுறை உருவாக்கிய பெருமை கொரோனாவையே சாரும்.

ச ப் பா ணி

முல்லைக்கு தேர் கொடுத்தார் பாரி..

சின்னம்மாவுக்கு கார் கொடுத்தார் சம்பங்கி

செந்திலின்_கிறுக்கல்கள்

மாறா பிளைட் டிக்கெட்ட ஒரு ரூபாய்க்கு கொடுத்ததுக்கு பதிலா பெட்ரோல ஒரு ரூபாய்க்கு கொடுத்தா ரொம்ப புண்ணியமா போகும்..!

ஜோக்கர்..

எல்லாருக்கும் இருக்குற பொதுவான பிரச்சினை,

"நமக்கு பிடிச்சவங்களுக்கு" நம்மள பிடிக்க மாட்டேங்குது,

"நம்மள பிடிச்சவங்கள" நமக்கு பிடிக்க மாட்டேங்குது.

வாழ்க்கையோட டிசைன் அப்படி..!!

மயக்குநன்

அதிமுகவில் சில 'எட்டப்பன்கள்' உள்ளனர்!- ஜெயக்குமார்.

அவங்களைத்தான் இங்கிலீஷ்ல 'ஸ்லீப்பர் செல்ஸ்'னு சொல்லுவாங்க தலைவரே..!

சரவணன். ℳ

கொரோனாவுக்காக விளக்கேற்றியதைக் கூட சிலர் கிண்டல் செய்தனர் - மோடி

அப்ப நீங்க எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு தான் இருந்திருக்கீங்க...?

கோழியின் கிறுக்கல்!!

வாழ்க்கையின் பாதியில் தான் புரிகிறது,

இதுவரை பிடுங்கியது அனைத்தும் தேவையில்லாத ஆணி தான் என்பதும்,

இனிமேல் பிடுங்கப் போவதும் தேவையில்லாத ஆணி தான் என்பதும்!!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

புதன் 10 பிப் 2021