மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

பிரம்மாண்ட செட்டில் மாநாடு.. அசத்தும் சிம்பு !

பிரம்மாண்ட செட்டில் மாநாடு.. அசத்தும் சிம்பு !

சிம்பு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகிவரும் படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் உருவாகிவரும் படம் மாநாடு. பொலிட்டிகல் டிராமாவாக உருவாகிவரும் இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் 2019ல் துவங்க வேண்டியது, சிம்பு படப்பிடிப்புக்கு வராததால் தள்ளிப்போய், பலக்கட்ட சிக்கல்களைச் சந்தித்தது. மகாமாநாடு வரை சென்று இறுதியாக 2020ல் படப்பிடிப்பு துவங்கியது. சிம்பு ஒத்துக்கொண்டாலும் கொரோனா விடுவதாக இல்லை. மீண்டும் படப்பிடிப்பு நின்று போனது. இறுதியாக லாக்டவுன் தளர்வின் போது படத்தை துவங்கினார்கள். சென்னை, பாண்டிச்சேரி, ஊட்டி என படப்பிடிப்பை விரைந்து முடித்திருக்கிறது படக்குழு.

லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், படத்திற்கான பிரம்மாண்ட செட் ஒன்று சென்னை பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டிருக்கிறது. அரசியல் மாநாடு செட்டப்பில் ஆயிரத்துக்கும் மேல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கலந்துகொள்ள க்ளைமேக்ஸ் படப்பிடிப்புக்கு டீம் தயாராகி வருகிறது.

தனித்துவமான அரசியல் த்ரில்லர் கதையாக இருக்கும் என்றே படத்தில் பணியாற்றும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு அப்துல் மாலிக் கேரக்டரில் நடிக்கிறார் சிம்பு. சினிமாவில் முஸ்லீம்களை தவறாக காட்சிப்படுத்தும் பிம்பத்தை இந்த ரோல் உடைக்கும் என்கிறார்கள்.

இந்த படத்தை முடித்த கையோடு, பாதியில் தனித்துவிடப்பட்ட 'பத்து தல' படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார் சிம்பு. இந்த வருடம் மஹா, மாநாடு, பத்து தல படங்கள் அடுத்தடுத்து சிம்புவுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

புதன் 10 பிப் 2021