மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 10 பிப் 2021

கமலின் ‘இந்தியன் 2’ ஒளிப்பதிவாளர் மீண்டும் மாற்றம்?

கமலின் ‘இந்தியன் 2’ ஒளிப்பதிவாளர் மீண்டும் மாற்றம்?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. ஊழலுக்கு எதிராக இந்தியன் தாத்தா சுழற்றும் சாட்டையே ஒன்லைன். கடந்த வருட பிப்ரவரியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தினால் படப்பிடிப்பு நின்றுபோனது. அதன்பிறகு இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இந்த வருட ஜனவரியில் தொடங்கலாம் எனவும், தேர்தலுக்கு முன்பாக இந்தியன் 2 படத்தை இறக்கிவிடலாம் எனவும் ஆரம்பத்தில் திட்டம் போட்டிருந்தார் கமல்ஹாசன். ஆனால், படத்தின் பணிகள் அதிகமாக இருப்பதால் தொடங்கினாலும் தேர்தலுக்கு முன்பாக வெளியிடுவதெல்லாம் சாத்தியமில்லை என்பதால் இந்தியன் 2 இன்னும் தொடங்கவே இல்லை. அதோடு, தேர்தல் பணியில் கமல்ஹாசன் தீவிரமாக இயங்கிவருகிறார். சமீபத்தில் காலில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பதால் இந்தப் படம் தொடங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிடவில்லை.

ஆக, ஒரு வருடமாக படத்தின் படப்பிடிப்பு தொடங்காமல் இழுத்துக்கொண்டு போவதால், படத்தில் கமிட்டான நடிகர்கள் வேறு படத்தில் நடிக்கவும் முடியாமல் இருக்கிறார்கள். இதனால், படத்தில் அடிக்கடி மாற்றங்கள் நடந்தும் வருகிறது.

இந்தியன் 2 படத்திற்கான ஒளிப்பதிவாளராக ஆரம்பத்தில் ஒப்பந்தமானவர் ரவி வர்மன். படப்பிடிப்பு தொடங்குவதில் ஏற்பட்ட இழுபறியினால், இதிலிருந்து விலகி மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்துக்குச் சென்றுவிட்டார். அதன் பிறகு, ரவி வர்மனுக்குப் பதில் ரத்னவேலு படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார்.

பொன்னியின் செல்வன் மற்றும் இந்தியன் 2 என இரண்டு படத்தையுமே லைகா நிறுவனம்தான் தயாரித்துவருகிறது. பொருளாதார ரீதியாகவும் தயாரிப்பு தரப்பில் சிக்கல் இருப்பதாகவே தெரிகிறது. அதோடு, தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ச்சியாக வாய்ப்புகளும் ரத்னவேலுவுக்கு வந்துகொண்டிருக்கிறதாம். இந்தியன் 2 படத்துக்கான இரண்டு அல்லது மூன்று வருடங்களைச் செலவு செய்வதற்கு பதில், படத்திலிருந்து வெளியேறிவிட முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல்.

ஏன் வெளியேறுகிறார் என்று விசாரித்தால், சூர்யா நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் பாண்டிராஜ் இயக்கும் படத்துக்குப் பணியாற்ற வாய்ப்பு வந்திருக்கிறதாம். ஷங்கர் விரைவிலேயே இந்தியன் 2 தொடங்கினால் ரத்னவேலு இதில் தொடர்வார் என்று தெரிகிறது. இல்லையென்றால், சூர்யா படத்துக்குச் சென்றுவிடுவார் என்றே சொல்லப்படுகிறது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

புதன் 10 பிப் 2021