மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 பிப் 2021

சென்னை டெஸ்ட்: தோல்வியடைந்த இந்திய அணி!

சென்னை டெஸ்ட்: தோல்வியடைந்த இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 578 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 178 ரன்களுக்குச் சுருட்டியது. பின்னர் 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே என முன்னணி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், ஷுப்மன் கில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் ஆடினார்.

கோலியுடன் இணைந்து சிறப்பாக ஆடிய கில், அரைசதம் கடந்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் வீழ்ந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றது. பின்னர் கோலியுடன் கைகோத்த அஷ்வின் ஒருபுறம் தடுப்பாட்டத்தில் ஈடுபட, இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடியது. இதற்கிடையில் நிதானமாக ஆடிய கோலி அரை சதம் அடித்தார்.

சிறிது நேரம் தாக்குப்பிடித்த அஷ்வினும் ஆட்டமிழக்க, பொறுப்பாக ஆடிவந்த கோலி 72 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் போல்டானார். பின்னர் வந்த வீரர்களும் நிலைக்காததால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இங்கிலாந்து தரப்பில் லீச் நான்கு விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். இதன் மூலம் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் ரஹானே, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நதீம் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட்டாகியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

இங்கிலாந்து எதிரான இரண்டாவது டெஸ்ட் இதே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 13ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 50 சதவிகிதம் ரசிகர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கி அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி உள்ளன.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

செவ்வாய் 9 பிப் 2021