மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 9 பிப் 2021

போடு வெடிய..! விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்!

போடு வெடிய..! விஜய்சேதுபதியின் இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்!

இந்த வருடத்தை மாஸ்டர் படத்தின் மூலம் துவங்கியிருக்கிறார் விஜய்சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர் படமானது கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியானது. விஜய்க்கு இணையான ரோலில் நடித்தது மட்டுமல்லாமல், விஜய்க்கு இணையான பாராட்டையும் வரவேற்பையும் பெற்றார் சேதுபதி.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் செம பிஸியாக நடித்தும் வருகிறார். இந்நிலையில், ஒரே நாளில் விஜய்சேதுபதி நடித்த இரண்டு படங்கள் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் திரையரங்குகளுக்கு முழுமையான தளர்வு கொடுக்கப்பட்டிருப்பதால் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதியைக் குறிவைத்து எக்கச்சக்கப் படங்கள் வெளியாகிறது.

அப்படி, காதலர் தின ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது ‘குட்டி ஸ்டோரி’. ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஓடிடி ரிலீஸூக்காக உருவான ஆந்தாலஜி இது. முன்னதாக, திரையரங்கிலும் வெளியாகிறது. மொத்தம் நான்கு கதைகள் கொண்ட ஆந்தாலஜி படம். கெளதம் மேனன், வெங்கட்பிரபு, ஏ.எல்.விஜய் மற்றும் நலன் குமாரசாமி ஆகிய நான்கு இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள். இதில், நலன்குமாரசாமி இயக்கும் கதையில் நாயகனாக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். இவரோடு அதிதிபாலன், அமலாபால், ரோபோ ஷங்கர், மேகா ஆகாஷ், ஆர்யா, வருண், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், விஜய்சேதுபதி நடிப்பில் தெலுங்கில் உருவாகியிருக்கும் படம் ‘உப்பென்னா’. நாயகனாக வைஷ்ணவ், நாயகியாக கீர்த்தி நடித்திருக்கிறார்கள். நாயகியின் தந்தை ரோலில் டெரர் வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். பிச்சிபாபு சனா இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் டிரெய்லரைப் பார்க்கும் போது கார்த்தி, ராதா நடித்து வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் மில்லினிய கால வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது. அப்படியே தியாகராஜனின் கேரக்டரை உரித்துவைத்தது போல, விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படமும் வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

செவ்வாய் 9 பிப் 2021