மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 8 பிப் 2021

லோகேஷூக்காக விஜய்சேதுபதியின் புதுமுடிவு!

லோகேஷூக்காக விஜய்சேதுபதியின் புதுமுடிவு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கிறது. அவர் அறிமுகமான ‘மாநகரம்’ கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படங்களைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ என அனைத்துப் படங்களுமே பெரிய ஹிட்.

அடுத்தக் கட்டமாக கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ படத்தை இயக்குகிறார் லோகேஷ். இந்தப் படத்துக்கான அறிமுக வீடியோ வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்காக தெலுங்கு , தமிழ் என பல தயாரிப்பாளர்களிடமிருந்து வந்த வாய்ப்பை ஓரம் கட்டிவிட்டு, கமல் படத்திற்காக தயாரானார் லோகேஷ். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே படப்பிடிப்பை முடித்து, படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால், சமீபத்தில் அவரின் காலில் நடந்த சின்ன அறுவை சிகிச்சையின் காரணத்தினாலும், தேர்தல் பணிகளினாலும் விக்ரம் படம் துவங்குவது சிக்கலாகியிருக்கிறது. இந்த ஒரு படத்திற்காக மற்ற படங்களை தள்ளிவைட்டதால் இப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்துவந்தார் லோகேஷ்.

இந்நிலையில், புதிய முடிவொன்றை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. என்னவென்றால், விஜய்சேதுபதியை வைத்து விரைவாக முடியும் விதமாக ஒரு படத்தை நடுவில் எடுத்துவிடலாம் என்று திட்டமிட்டிருக்கிறாராம் லோகேஷ். குறைவான பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மாஸ்டர் படத்தில் விஜய்யைத் தாண்டி, விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் பெரிதாகப் பேசப்பட்டது. இந்தியளவில் விஜய்சேதுபதியின் மார்கெட் ரேட்டிங் அதிகமானதற்கு மாஸ்டர் மிகப்பெரியளவில் உதவியாக இருந்திருக்கிறது என்பது தவிர்க்கமுடியாத உண்மை. இந்நிலையில், லோகேஷூக்காக விஜய்சேதுபதி படம் நடிக்க முடிவெடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இந்தியாவிலேயே அதிக படங்களை லைன் அப்பில் வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய்சேதுபதி. அப்படி இருக்கையில், லோகேஷ் கனகராஜூக்கு எப்படி தேதிகள் ஒதுக்கப் போகிறார் என்பது அவருக்கு நிச்சயம் சவாலான விஷயம் தான்.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

திங்கள் 8 பிப் 2021