மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

இறுதியாக ரிலீஸை நெருங்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ .. வெல்கம் செல்வா

இறுதியாக ரிலீஸை நெருங்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ .. வெல்கம் செல்வா

ஐந்து வருடத்துக்கு முன்பு அந்த அறிவிப்பு வெளியானது. செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் அறிவிப்பு தான் அது. எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் தயாராகிவிட்ட நிலையிலும், நீண்ட நாட்களாக ரிலீஸாக முடியாமல் காத்துக் கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுக்கு இருக்கும் பொருளாதாரச் சிக்கலினால் இப்படம் இன்னும் வெளியாகவில்லை. அவர் தயாரிப்பில் ஒரே நேரத்தில் தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா, விக்ரமின் துருவநட்சத்திரம் மற்றும் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் உருவானது. இதில், வேல்ஸ் நிறுவன உதவியுடன் தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா வெளியானது நினைவுக்கூறத்தக்கது.

செல்வராகவனுக்கு சூர்யா, ரகுல்ப்ரீத் சிங் நடித்த ‘என்.ஜி.கே.’ படமானது, நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்குப் பிறகு தயாராகி ரிலீஸாகிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடுத்ததாக நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாக இருக்கிறதாம். ரிலீஸூக்கான முதல்கட்டப் பணிகள் துவங்கியிருக்கிறது. செல்வராகவனின் நெருங்கிய வட்டாரத்திடமிருந்து கிடைத்த தகவல் படி, மார்ச் முதல் வாரம் படம் வெளியிட தயாரிப்புப் பணிகள் போய்க் கொண்டிருக்கிறதாம்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, செல்வா இயக்கத்தில் சந்தானம், அதிதி நடிப்பில் மன்னவன் வந்தானடி படமும் ரிலீஸூக்கு வெயிட்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது

செல்வராகவன் படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. என்.ஜி.கே. பெரிதாக எதிர்பார்த்து, ஏமாற்றத்தைத் தந்த படம். ஆக, நெஞ்சம் மறப்பதில்லை வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றால், தனுஷ் நடிப்பில் இவர் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறும் என்பதில் சந்தேகமில்லை. தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன் 2 படமும் செல்வராகவன் இயக்க இருப்பதாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

ஞாயிறு 7 பிப் 2021