மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

விஜய் 66 லேட்டஸ்ட் ரிப்போர்ட் :மீண்டும் அட்லீ?

விஜய் 66 லேட்டஸ்ட் ரிப்போர்ட் :மீண்டும் அட்லீ?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் வெளியான படம் மாஸ்டர். வசூலில் பெரிய சாதனையைப் படைத்தது மட்டுமல்லாமல், ஓடிடி தளத்தில் வெளியாகியும் பெரியளவு வரவேற்பைப் பெற்றுவருகிறது.

அடுத்தக் கட்டமாக விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். கோலமாவு கோகிலா பட இயக்குநர்தான் நெல்சன். தற்பொழுது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். விஜய் 65 படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். காமெடி ஆக்‌ஷன் கேங்க்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பானது ஏப்ரல் மாதம் துவங்கும் என்கிறார்கள். மாஸ்டரைப் போல அடுத்த வருட பொங்கலுக்குத் திரையில் இப்படத்தை எதிர்பார்க்கலாம்.

இதைத் தொடர்ந்து விஜய் 66-வது படத்தை இயக்க இருக்கும் இயக்குநர் குறித்துப் பல தகவல்கள் வெளியாகிவருகின்றன. மாஸ்டர் ரிலீஸூக்கு முன்பாகவே லோகேஷை மீண்டும் விஜய்யை இயக்க கேட்டுக் கொண்டார்கள். மாஸ்டர் ரிலீஸூக்குப் பிறகு விஜய்சேதுபதிக்கு படத்தில் அதிக முக்கியத்துவம் இருந்ததால், விஜய் - லோகேஷ் கூட்டணி மீண்டும் இணையுமா என்பது சந்தேகமே. தொடர்ந்து, இயக்குநர் ஹெச்.வினோத்திடம் பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால், லேட்டஸ்ட் ரிப்போர்ட் என்னவென்றால், விஜய்யை அட்லீ மீண்டும் இயக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. விஜய்க்கு மூன்று ஹிட் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்றுமே பெரியளவில் வசூல் சாதனைப் படைத்தது. அதோடு, விஜய்க்கு நெருங்கிய இயக்குநர்களில் இவரும் ஒருவர். நெல்சன் படத்தை முடித்துவிட்டு, மீண்டும் அட்லியுடன் விஜய் இணைய வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். கூடுதல் சர்ப்ரைஸ் ஒன்றும் இருக்கிறது. அட்லீ - விஜய் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறதாகச் சொல்கிறார்கள். சொல்லப் போனால், ஏற்கெனவே அட்லீ - விஜய் - ஏஜிஎஸ் கூட்டணியில் உருவான பிகில் வெறித்தன ஹிட். மீண்டும் விஜய்யை அட்லீ இயக்க ஏஜிஎஸ் முயற்சி தான் காரணம் என்கிறார்கள்.

தற்பொழுது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை இயக்கத் தயாராகிவருகிறார் அட்லீ. படத்திற்கான முதல்கட்டப் பணிகளைத் துவக்கிவிட்டது அட்லீ டீம். எப்படியும் இந்தப் படத்தை முடிக்கவும், நெல்சன் படத்தை விஜய் முடிக்கவும் சரியாக இருக்கும். அதன்பிறகு, விஜய் - அட்லீ டீம் மீண்டும் இணையலாம்.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 7 பிப் 2021