மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 7 பிப் 2021

போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் அஜித் எனச் சொல்லப்பட காரணம்!

போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் அஜித் எனச் சொல்லப்பட காரணம்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். பாலிவுட் திரையுலகின் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவர். இவரின் மகனும் மகளுமான அர்ஜுன் கபூர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரும் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர்கள். ஸ்ரீதேவி மீதும் கபூர் குடும்பத்தின் மீதுள்ள நட்புக்காக போனி கபூர் தயாரிப்பில் படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜித்.

அப்படி, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2019இல் நேர்க்கொண்டப் பார்வை படம் வெளியானது. இது, அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜித். அதுதான், தற்போது தயாராகிவரும் ‘வலிமை’ படம்.

வலிமை படத்தில் அஜித்துடன் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது வலிமை. வெளிநாட்டு ஷெட்யூல் மட்டுமே மீதமிருக்கிறது. இந்த வருடம் நிச்சயம் வலிமை வெளியாகிவிடும்.

வலிமை படத்தை முடித்துவிட்டு கோகுலம் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு ஒரு படம் நடிக்க இருந்தார் அஜித். அந்தப் படத்தை சுதா கொங்கரா இயக்குவார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இதில் ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. மீண்டும் போனி கபூர் தயாரிப்பிலேயே ஒரு படம் நடிக்க இருக்காராம் அஜித். அதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்பாக தொடங்கிய படம் வலிமை. கொரோனாவினால் படத்தின் படப்பிடிப்பில் தொடங்கி ரிலீஸ் வரை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்தை தொடங்கிவிட்டு, தயாரிப்பு காலம் அதிகமானால் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்பது உண்மை. ஏனெனில், பைனான்ஸ் பெற்றே படத்தைத் தொடங்குவார்கள். சொன்ன தேதியில் முடியாவிட்டால் கணக்குப் போட்டதைவிட வட்டி அதிகமாகும். படத் தயாரிப்பின் செலவும் அதிகமாகும். இதையெல்லாம் கணக்கில்கொண்டுதான், மீண்டும் போனி கபூருக்கு ஒரு படம் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், ஒரு தயாரிப்பாளருக்கு தொடர்ச்சியாக மூன்று படங்கள் கொடுப்பதெல்லாம் இதுவே முதன்முறை. இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறதா, இல்லையா என்பது விரைவில் அதிகாரபூர்வமாகத் தெரிந்துவிடும்.

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

ஞாயிறு 7 பிப் 2021