மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 பிப் 2021

மாஸ்டரைத் தொடர்ந்து விஜய்சேதுபதியின் அடுத்த வில்லத்தனம் !

மாஸ்டரைத் தொடர்ந்து விஜய்சேதுபதியின் அடுத்த வில்லத்தனம் !

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார்.

பெரிய ஹீரோக்களின் படங்களில் எதிர்நாயகனாக நடிக்கும் நடிகர்கள் வெளியில் தெரிவதெல்லாம் பெரிதாக நடக்காது. பாட்ஷாவில் ரகுவரன், கில்லியில் பிரகாஷ் ராஜ் மாதிரியான அனுபவ நடிகர்களால் மட்டுமே ஹீரோவுக்கு இணையான நடிப்பைக் கொடுத்து கவனத்தை ஈர்க்க முடியும். அப்படியாக விஜய் படத்தில் விஜய்சேதுபதி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார்.

மாஸ்டரில் விஜய்யை விட விஜய்சேதுபதியே அதிகமாக பிரபலமாகியும் விட்டார். முழுக்க முழுக்க வில்லத்தனம் காட்டியிருக்கும் விஜய்சேதுபதியின் அடுத்த ரிலீஸாக இருக்கும் படம் உப்பென்னா. பிச்சுபாபு சனா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் வைஷ்ணவ் தேஜூம், நாயகியாக கீர்த்தி ஷெட்டியும் நடித்திருக்கிறார்கள். படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் மாஸ்டர் படத்திற்கு ஏகபோக வரவேற்பு. குறிப்பாக, விஜய்சேதுபதியைக் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள் தெலுங்கு ரசிகர்கள். இதுதான் சரியான நேரம் என உப்பென்னா படத்தை இறக்கிவிடுகிறது தெலுங்கு சினிமா. மாஸ்டரைத் தொடர்ந்து இப்படத்திலும் டெரர் வில்லனாக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி.

மாஸ்டர் தெலுங்கு வெர்ஷனில் விஜய்சேதுபதிக்கு டப்பிங் கச்சிதமாகப் பொருந்திப் போனது. ஆனால், இப்படத்தில் டப்பிங் சரியாக இல்லை என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆனால், நடிப்பால் டிரெய்லரில் மிரட்டியிருப்பதாக புகழ்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்மா ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் சேதுபதி. தொடர்ந்து, அவருக்கு தெலுங்கில் நேரடியாக வெளியாகும் இரண்டாவது படம் இது. மேலும், இப்படம் வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகிறது. அதேநாளில் தமிழில் குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி வெளியாகிறது. இதில் நலன்குமாரசாமி இயக்கிய ஒரு கதையில் விஜய்சேதுபதி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உப்பென்னா படத்தின் டிரெய்லரைப் பார்க்கும் போது, பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் சாயல் இருப்பதாக இணையத்தில் ரசிகர்கள் கூறிவருகிறார்கள். குறிப்பாக, தியாகராஜன் ரோலில் விஜய்சேதுபதி நடித்திருப்பது போலவே தெரிகிறார்.

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 6 பிப் 2021