மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 பிப் 2021

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 555 ரன்களைக் குவித்த இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: 555 ரன்களைக் குவித்த இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 555 ரன்களைக் குவித்துள்ளது இங்கிலாந்து அணி.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று (பிப்ரவரி 5) தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 89.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 263 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஜோ ரூட் 128 ரன்களுடன் (197 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 6) தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுடன், பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரின் கூட்டணி அதிரடியாக விளையாடியது.

ஸ்டோக்ஸ் 118 பந்துகளில் 82 ரன்கள் அடித்திருந்தபோது அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட்டுடன் ஒல்லி போப் சேர்ந்து ஆட்டத்தைத் தொடர்ந்த நிலையில், கேப்டன் ஜோ ரூட் 200 ரன்களைக் கடந்தார். கடந்த இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்தவர், இந்தப் போட்டியிலும் இரட்டை சதம் அடித்து சாதனைப் படைத்தார்.

தொடர்ந்து இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. 34 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்துக்கு எல்பிடபிள்யூ ஆனார் ஒல்லி போப். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் 377 பந்துகளில் 218 ரன்கள் எடுத்திருந்தபோது நதீம் பந்தில் எல்பிடபிள்யூவால் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 30 ரன்களிலும், ஆர்ச்சர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இந்த இருவரின் விக்கெட்டுகளையும் இஷான் சர்மா எடுத்தார்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 555 ரன்கள் எடுத்துள்ளது. டாம் பேஸ் 28 ரன்களும், ஜாக் லீச் 6 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இந்திய அணியின் சார்பில் பும்ரா இரண்டு விக்கெட்டுகளும், அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளும், நதீம் இரண்டு விக்கெட்டுகளும், இஷான் சர்மா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர். இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் ஏமாற்றம் அளித்தது.

தற்போதைய நிலையில் இந்த டெஸ்ட் போட்டி, 62 சதவிகிதம் டிராவில் முடியும் என்றும் 33 சதவிகிதம் இங்கிலாந்து வெல்லும் என்றும் 5 சதவிகிதம் மட்டும் இந்தியா வெற்றிபெற வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் ஆட்டம் இதை உறுதி செய்துவிடும்.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

3 நிமிட வாசிப்பு

வசூலில் வாகை சூடிய ‘வீரமே வாகை சூடும்’!

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

3 நிமிட வாசிப்பு

பரத்தை அடித்தேனா?- சர்ச்சைகளுக்கு வெங்கடேஷ்பட் விளக்கம்!

சனி 6 பிப் 2021