மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 பிப் 2021

பொன்னியின் செல்வன் தோற்றத்தை வைத்து புது யோசனை !

பொன்னியின் செல்வன் தோற்றத்தை வைத்து புது யோசனை !

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் கார்த்தி. இவர் மட்டுமல்லாமல் விக்ரம், ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், ரகுமான், சரத்குமார், ரகுமான், த்ரிஷா, லால் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள்.

ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக மூன்று செட்களில் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் பாகுபலி படப்பிடிப்பு நடந்த இடத்தில் தான், இந்தப் படத்துக்கும் செட் போட்டு படப்பிடிப்பு நடத்திவருகிறார்கள். கூடுதலாக, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முக்கால் பாக இடத்தை பொன்னியின் செல்வன் படக்குழுவே ஆக்கிரமித்திருக்கிறது. சமீபத்தில் படத்திற்கான பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்த மாதத்துக்குள் கார்த்தி நடிக்கும் காட்சிகள் முழுமையாக முடிவதாக ஒரு தகவல். இந்தப் படத்தை முடித்துவிட்டு, இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகிறது. இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், பொன்னியின் செல்வனுக்காக அதிக முடிகளை வளர்த்திருக்கிறார் கார்த்தி. பொன்னியின் செல்வனை முடித்துவிட்டு மித்ரன் படத்தில் நடிக்க இருப்பதால், அதிக முடி இருப்பது போல ஏதும் காட்சிகள் இருந்தால் முதலில் எடுத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள். அதிக முடி இருக்கும் கெட்டப்புக்காக பிளாஷ்பேக் போர்ஷன் ஒன்றை உருவாக்கியிருக்காராம் இயக்குநர். அதனால், அந்தக் காட்சிகளை முதலில் எடுத்துவிட்டு, பிறகு முடியை வெட்டிவிட்டு படத்திற்கான லுக்கிற்கு மாற இருக்காராம் கார்த்தி.

சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் வெளியாகும் போதே மித்ரன் - கார்த்தி கூட்டணி அறிவிக்கப்பட்டது. பொன்னியின் செல்வனால் தள்ளிப்போய் அடுத்தடுத்த மாதங்களில் படப்பிடிப்பு துவங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு செல்வராகவனிடம் அசோசியேட் இயக்குநராக இருந்தவரிடம் கதை கேட்டு உறுதி செய்துவைத்திருக்கிறார் கார்த்தி. அந்தப் படம் துவங்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கார்த்தி நடிப்பில் இந்த வருடம் ரொமோ இயக்குநர் பாக்கியராஜ் கண்னன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனாவுடன் நடித்திருக்கும் சுல்தான் படமானது வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

சனி 6 பிப் 2021