மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 பிப் 2021

பிகில் - கைதி ஸ்டைலில் வெளியாகும் இரண்டு பெரிய ஹீரோ படங்கள்!

பிகில் - கைதி ஸ்டைலில் வெளியாகும் இரண்டு பெரிய ஹீரோ படங்கள்!

பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானாலே ரசிகர்களுக்கு கொண்டாட்ட மனநிலை தான். அதிலும் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் மோதும் போது இன்னும் ஆர்வமாகிவிடுவார்கள். அப்படித்தான் அஜித்தின் விஸ்வாசமும் ரஜினியின் பேட்ட படமும் ஒரே நாளில் வெளியானது. அதுபோல, விஜய்யின் பிகில் படத்தோடு கார்த்தியின் கைதி வெளியானது. இப்படி வெளியாகும் போது பெரிய எதிர்பார்ப்பும், சர்ப்ரைஸூம் ரசிகர்களுக்கு கிடைக்கும். இந்த தகவலையெல்லாம் இப்போது சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அட்லியின் உதவியாளரான சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட படம் ‘டான்’. சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். கல்லூரி கதையம்சத்துடன் செம ஜாலியான காமெடி படமாக இப்படம் உருவாக இருக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தைப் போலவே, மற்றுமொரு பெரிய ஹீரோவின் படத்தின் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. அதுதான், சூர்யாவின் 40வது படம். பாண்டிராஜ் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய லீட் ரோலில் நடிக்க இருக்கிறார். படத்தை டி.இமான் இசையமைக்கிறார். கடைக்குட்டிச் சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை மாதிரி பேமிலி டிராமாவாக உருவாக இருக்காம்.

இவ்விரண்டு படங்களுமே விரைவில் படப்பிடிப்பைத் துவங்குகிறார்கள். இரண்டுமே குறைவான காலக்கட்டத்துக்குள் உருவாகும் விதத்திலேயே உருவாகிறதாம். இரண்டு படத்திலுமே நாயகி பிரியங்கா மோகன் என்பது ஒற்றுமை என்றாலும், இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் டான் படத்தை செப்டம்பர் ரிலீஸூக்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதுபோல, சூர்யா 40 படமும் அதே விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறார்களாம். இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லையென்றாலும், இரண்டு படங்களும் ஒரே நாளையே டார்கெட் செய்து படத்தைத் தயார் செய்துவருகிறது.

ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியானால் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். தோல்விப் படங்களைத் தொடர்ச்சியாக சிவகார்த்திகேயன் கொடுத்துக் கொண்டிருந்த போது, நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் மூலம் சிவாவுக்கு பெரிய ப்ரேக் கொடுத்தவர். இப்போது பாண்டிராஜ் படம் தான் சூர்யா 40. ஆக, அந்தப் படத்துடன் மோதுமா சிவகார்த்திகேயனின் டான் எனும் கேள்வியும் எழுகிறது.

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

சனி 6 பிப் 2021