மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 பிப் 2021

சென்னை டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து

சென்னை டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான சென்னையில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட், ஐந்து 20 ஓவர் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.

கொரோனா பரவலுக்குப் பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி அரங்கேறும் இந்த டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் ரோரி பேர்ன்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டான் லாரன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். மூன்றாவது விக்கெட்டுக்கு டாம் சிப்லியுடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது.

ஜோ ரூட் 164 பந்தில் 12 பவுண்டரியுடன் சதம் அடித்தார். அவருக்கு இது 100ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதன்மூலம் 100ஆவது டெஸ்டில் 100 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இரட்டை சதமும், இரண்டாவது டெஸ்டில் சதமும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடன் ஜோடி சேர்ந்த டாம் சிப்லி அபாரமாக விளையாடி 87 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 128 ரன்கள் எடுத்துள்ளார்.

பும்ரா இரண்டு விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

வாழ்க்கை ஒரு கனவுதானே: ஏ.ஆர்.ரஹ்மான்

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

2 நிமிட வாசிப்பு

சாய் பல்லவி படத்தை வெளியிடும் சூர்யா ஜோதிகா

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

3 நிமிட வாசிப்பு

மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

வெள்ளி 5 பிப் 2021