மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 பிப் 2021

100 கிலோ வெயிட்டுடன் அசோக் செல்வன்.. வித்தியாசமான ‘தீனி’ டிரெய்லர் !

100 கிலோ வெயிட்டுடன் அசோக் செல்வன்.. வித்தியாசமான ‘தீனி’ டிரெய்லர் !

கடந்த வருடம் ரிலீஸான படங்களே குறைவு. அப்படி வெளியான படங்களில் ஒருசில படங்களே ஹிட்டானது. அதில் ஒரு படம் தான் அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’. இந்தப் படத்தைத் தொடர்ந்து, அசோக் செல்வன் நடிப்பில் ரிலீஸாக ரெடியாகியிருக்கும் படம் தீனி.

அசோக் செல்வன் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘நின்னிலா நின்னிலா’. இப்படத்தை அனி சசி என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் அசோக் செல்வனுடன் நித்யா மேனன் மற்றும் ரீத்து வர்மா நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் தமிழ் வெர்ஷனே ‘தீனி’. இப்படத்தின் டிரெய்லரை இன்று தனுஷ் வெளியிட்டார்.

படத்தில் 100 கிலோ எடையுடன் தொப்பையுமாக நடித்திருக்கிறார் அசோக் செல்வன். செப் ஆக லண்டனில் பணியாற்றும் தேவ்வுக்கு (அசோக் செல்வன்) தசை பிடிப்பு பிரச்னை இருக்கிறது. அவருடன் பணியாற்றும் செப் தாரா (ரீத்து வர்மா). மனதளவில் குழந்தையாக இருக்கும் மாயா (நித்யா மேனன்) . இந்த மூவருக்குள் நடக்கும் களமே திரைக்கதை. படம் முழுக்க லண்டனில் படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் நாசர் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன், ஃபீல் ஹிட் டிரெய்லராக வெளியாகியிருக்கிறது தீனி.

இப்படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாவது போல, மோகன்லால் நடிக்கும் ‘மரக்காயர்’ படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார் அசோக் செல்வன்.

டிரெய்லர் வீடியோ

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

வெள்ளி 5 பிப் 2021