மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 பிப் 2021

உறுதியான கத்ரீனா கைப் உடனான ஷூட்டிங் தேதி.. இந்தியளவில் டாப் விஜய்சேதுபதிதான் ஏன் தெரியுமா?

உறுதியான கத்ரீனா கைப் உடனான ஷூட்டிங் தேதி.. இந்தியளவில் டாப் விஜய்சேதுபதிதான் ஏன் தெரியுமா?

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என இந்தியாவின் பிரதான மொழிகளில் பிஸியாக நடித்துவரும் ஒரே நடிகர் விஜய்சேதுபதி.

இந்தியில் எடுத்துக்கொண்டால் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கிறார். ‘மும்பைகர்’ என இப்படம் பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் முனிஸ்காந்த் நடித்த ரோலில் இந்தியில் நடிக்கிறார் சேதுபதி. இப்படம் மட்டுமின்றி, கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கத்தில் மவுனப் படமாக உருவாகும் ‘காந்தி டாக்கீஸ்’ படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

காந்தி டாக்கீஸ் படத்தின் சிறப்பு என்னவென்றால், 1987ல் கமல் நடிப்பில் வெளியான ‘புஷ்பக விமானா’ படத்துக்குப் பிறகு சுமார் 33 ஆண்டுக்குப் பிறகு இந்தியத் திரையுலகில் உருவாகும் மவுனப் படமாக இது இருக்கப் போகிறது.

இவ்விரண்டுப் படங்களோடு, ஆயுஷ்மான் குர்ரானா நடித்த அந்தாதூன் பட இயக்குநரின் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் விஜய்சேதுபதி. ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இப்படத்தில் கத்ரீனா கைப் உடன் இணைந்து நடிக்க இருக்கிறார். நாயகி முக்கியத்துவம் கொண்ட படமாக இது உருவாகிறதாம். இதில் முக்கிய லீட் ரோலில் சேதுபதி நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது.

விஜய்சேதுபதி ஏகப்பட்டப் படங்களைக் கைவசம் வைத்திருப்பதால், தற்பொழுது எந்தப் படத்தில் நடித்துவருகிறார் என்று துல்லியமாக சொல்லமுடியவில்லை. ஆனால், விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நயன்தாரா, சமந்தாவுடன் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படமும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் படமும் தற்பொழுது நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஏப்ரல் மாதம் பூனே-வில் அந்தாதூன் இயக்குநர் ஸ்ரீராம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். சிறுகதையை மையமாகக் கொண்டே இந்தப் படம் உருவாகிறதாம். ஒரே ஷெட்யூலில் முழு படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டிருக்கிறதாகத் தெரிகிறது.

இந்தியாவிலேயே இந்த வருடம் அதிக படங்களை ரிலீஸ் செய்யும் நடிகராகவும் அதிக படங்களில் நடிக்கும் நடிகராகவும் விஜய்சேதுபதி இருப்பார் என்பது மட்டும் உறுதி.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

வெள்ளி 5 பிப் 2021