மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 பிப் 2021

சென்னை இரண்டாவது டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி!

சென்னை இரண்டாவது டெஸ்ட்: ரசிகர்களுக்கு அனுமதி!

சென்னையில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவற்றில், முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. மூன்றாவது டெஸ்ட் பகல் இரவு போட்டியாக ஆமதாபாத் நகரில் உள்ள மோதேரா ஸ்டேடியத்தில் நடைபெறும். இதே ஸ்டேடியத்தில் நான்காவது போட்டியும் நடைபெற உள்ளது.

இதன்படி முதல் போட்டி வருகிற 5ஆம் தேதியும், இரண்டாவது போட்டி வருகிற 13ஆம் தேதியும்

சென்னையில் நடைபெறுகிறது. கொரோனா பாதிப்புகளால் சென்னை அதிகம் பாதிக்கப்பட்ட சூழலில் ரசிகர்களை அனுமதிப்பது சந்தேக நிலையில் இருந்தது.

இந்த நிலையில் சென்னையில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைக் காண தமிழக அரசின் தளர்வை அடுத்து, 50 சதவிகித ரசிகர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.

இதேபோல் மோதேரா ஸ்டேடியத்தில் நடைபெறும் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளிலும் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

8 நிமிட வாசிப்பு

விக்ரம் வசூல் உண்மையில் சாதனைதானா?

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

செவ்வாய் 2 பிப் 2021