மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 2 பிப் 2021

வைரலாகும் விராட் கோலியின் மகள் படம்!

வைரலாகும் விராட் கோலியின் மகள் படம்!

விராட் கோலியின் மனைவி நடிகை அனுஷ்கா சர்மா முதன்முறையாக தனது மகளின் புகைப்படம் மற்றும் பெயரை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் கடந்த 2017இல் காதல் திருமணம் செய்து கொண்டனர். கர்ப்பமான அனுஷ்கா சர்மாவுக்கு ஜனவரியில் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியத் தொடரில் விளையாடி வந்த விராட் கோலி, அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தை முடித்த பிறகு விடுப்பில் நாடு திரும்பினார்.

இந்தத் தம்பதிக்கு கடந்த மாதம் 11ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அனுஷ்கா சர்மா, அக்குழந்தைக்கு ‘வாமிகா’ என பெயரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

செல்ல மகளை பார்த்து சிரித்தபடி இருக்கும் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

3 நிமிட வாசிப்பு

சினிமாவை விட்டு விலகவில்லை: நாசர்

'பொன்னியின் செல்வன்' : புதிய அப்டேட்!

3 நிமிட வாசிப்பு

'பொன்னியின் செல்வன்' :  புதிய அப்டேட்!

செவ்வாய் 2 பிப் 2021