மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 பிப் 2021

மாஸ்டர் ஓடிடி சர்ச்சை : திரையரங்க உரிமையாளர்கள் புது முடிவு !

மாஸ்டர் ஓடிடி சர்ச்சை : திரையரங்க உரிமையாளர்கள் புது முடிவு !

சூர்யா நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது சூரரைப் போற்று. தியேட்டரில் வெளியாகாமல் டிஜிட்டல் தளத்துக்குச் சென்றதால், திரையரங்க உரிமையாளர்கள் சூர்யாவின் மீது அதிருப்தி அடைந்தனர்.

அதன்பிறகு, கொரோனா கட்டுக்குள் வந்தபிறகு, திரையரங்குகள் திறக்க அனுமதி கிடைத்தது. பின்னர், சின்ன பட்ஜெட் படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திரையரங்கில் வெளியாகிவந்தது. ஆனால், திரையரங்குகள் பழைய மாதிரி இயங்க முடியவில்லை. இந்நேரத்தில் தான் 50% இருக்கை அனுமதியின் போதே விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் வெளியானது. திரையரங்கிற்கு புத்துயிர் ஊட்டும் விதமாக பெரும் வசூல் கலெக்‌ஷனைக் கொடுத்தது மாஸ்டர்.

ஆனால், மாஸ்டர் படமானது கடந்த ஜனவரி 13ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி, இரண்டு வாரங்களில் அதாவது, ஜனவரி 29ஆம் தேதி பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. மாஸ்டர் தயாரிப்பாளரின் இந்த முடிவானது திரையரங்க உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கமானது புதிய முடிவொன்றை எடுத்திருக்கிறது. என்னவென்றால், திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள் 30 நாட்களுக்கு ஓடிடியில் வெளிவரக்கூடாது. இதற்கான ஒப்பந்தத்தை அந்தந்த தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தாலே, தியேட்டரில் வெளியிடப்படும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

சின்ன பட்ஜெட் மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே 30 நாட்கள் எனவும், விஜய், அஜித், ரஜினி, கமல் மாதிரியான பெரிய ஹீரோக்களின் படங்களுக்குக் குறைந்தது 50 நாட்கள் வரை ஓடிடியில் வெளியிடாமல் இருக்கவும் அறிவுறுத்தப்படும் எனவும் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் மாஸ்டர் படமானது ஓடிடியில் வெளியாகியிருக்கும் நேரத்தில், திரையரங்கிலும் திரையிடப்பட்டு வருகிறது. எப்படியும் பிப்ரவரி 4ஆம் தேதி வரை மட்டுமே அனைத்துத் திரையரங்கிலும் மாஸ்டர் ஓடும். அதன்பிறகு, தயாரிப்பாளரின் ஒப்பந்தத்தின் படி, குறிப்பிட்ட திரையரங்கில் மட்டுமே வெளியாகும்.

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

2 நிமிட வாசிப்பு

நடிகை மீனாவின் கணவர் மரணம்!

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

3 நிமிட வாசிப்பு

படப்பிடிப்பில் இருந்து பாதியில் கிளம்பிய அருள்நிதி

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

6 நிமிட வாசிப்பு

கொரோனாவால் மீனா கணவர் இறந்தாரா?

திங்கள் 1 பிப் 2021