மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 1 பிப் 2021

ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் ஐபிஎல்?

ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் ஐபிஎல்?

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தொடங்கி ஜூன் முதல் வாரத்துக்குள் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், 14ஆவது சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது

இந்த ஆண்டு ஐபிஎல் 20 ஓவர் போட்டியை எங்கு நடத்துவது என இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால், வாய்ப்புகள் அனைத்தும் சாதகமாக இருந்து, அரசு அனுமதித்தால் போட்டிகள் நம் நாட்டில் நடத்தப்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தொடங்கி ஜூன் முதல் வாரத்துக்குள் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 87 வருடங்களில் முதன்முறையாக ரஞ்சி கோப்பையை ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

மகேஷ் பாபுக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்

2 நிமிட வாசிப்பு

மகேஷ் பாபுக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான்

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

திரைக்கு வரும் ஆன்டி இண்டியன்!

9 நிமிட வாசிப்பு

திரைக்கு வரும் ஆன்டி இண்டியன்!

திங்கள் 1 பிப் 2021