மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 ஜன 2021

தடுமாற்றத்தில் ஜெகமே தந்திரம் படக்குழு!

தடுமாற்றத்தில் ஜெகமே தந்திரம் படக்குழு!

தனுஷுக்கு அடுத்த ரிலீஸ் ஜெகமே தந்திரம். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவிட்டது. சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி குறித்த அறிவிப்பு 2016இல் உறுதியானது. நடுவில், ரஜினி நடிக்க பேட்ட படத்தை இயக்க கார்த்திக் சுப்பராஜ் சென்றதால் ரஜினிக்காக தனுஷ் விட்டுக் கொடுத்தார். அதன் பிறகே ஜெகமே தந்திரம் உருவானது. ஆக, இந்தக் கூட்டணிக்காக ரசிகர்கள் ஐந்து வருடங்களாகக் காத்திருக்கிறார்கள்.

தற்போது ஜெகமே தந்திரம் எனும் ஹேஸ்டேக் இணையத்தில் டிரெண்ட்டாகி வருகிறது. என்னவென்று பார்த்தால் நெட்ஃப்ளிக்ஸில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அதோடு, ரூ.45 கோடிக்கு ஓடிடியில் விற்பனையாகிவிட்டதாகவும், மார்ச் மாதம் படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் பரவி வருகின்றன. கார்த்திக் சுப்பராஜ் உட்பட ஜெகமே தந்திரம் படக்குழுவினர் அனைவருமே திரையரங்கில் மட்டுமே இந்தப் படம் வெளியாகும் என கூறிவந்த நிலையில், திடீரென நெட்ஃப்ளிக்ஸில் எனும் தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னொரு பக்கம் ஜெகமே தந்திரம் படமானது ஓடிடி தளத்தில் வெளியாகாது என்பதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது. அது என்னவென்றால், படத்தின் பாதி படப்பிடிப்பு லண்டன் பகுதிகளில் நடந்திருக்கிறது. ஆக, அந்த நாட்டின் சலுகைத் தொகையைப் பெற வேண்டுமென்றால் படமானது திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டும். அதனால், ஜெகமே தந்திரம் நிச்சயம் தியேட்டரில்தான் வரும் எனச் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், ஓடிடி ரிலீஸுக்குத் திட்டமிடுகிறார்கள் என்றால், லண்டன் அரசின் சலுகைத் தொகைக்கு ஈடாக கூடுதலான தொகையை ஓடிடி நிறுவனம் தர தயாராக இருக்க வேண்டும். அப்படியென்றால் மட்டுமே இது சாத்தியம். ஏற்கெனவே கொரோனா லாக்டவுன் நேரத்தில் தயாரிப்பாளர் சசிகாந்த் ஓடிடி ரிலீஸுக்காக முயற்சி செய்தார். அப்போது எதிர்பார்த்த தொகை கிடைக்காதக் காரணத்தால் முயற்சியைக் கைவிட்டார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

அதோடு, ரூஸோ சகோதரர்களின் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸின் தயாரிப்பில் ‘க்ரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் தனுஷ். அதன் காரணமாக தனுஷ் படத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றிருக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது.

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 31 ஜன 2021