மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 ஜன 2021

பிப்ரவரிக்குத் திரையரங்கில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

பிப்ரவரிக்குத் திரையரங்கில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

இந்த வருடத்தை மாஸ்டருடன் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா. விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியானது மாஸ்டர். 50% இருக்கை அனுமதிக்கு மத்தியில் பெரிய வசூல் சாதனையைப் படைத்து, திரையரங்கில் படங்கள் வெளியாவதற்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது.

மாஸ்டரைத் தொடர்ந்து ஜனவரி 14ஆம் தேதி சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் படம் வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு, கடந்த ஜனவரி 28ஆம் தேதி சிபிராஜ் நடிப்பில் கபடதாரி படமும் திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், பிப்ரவரிக்குத் திரையரங்க ரிலீஸை சில படங்கள் உறுதி செய்திருக்கிறது.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 90ஆவது படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா, அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன், ராதாரவி, ரோபோ சங்கர், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இரண்டு நண்பர்களின் கதையாக கமர்ஷியல் டிராமாவாக உருவாகியிருக்கிறது. பிப்ரவரி 5ஆம் தேதி திரைக்கு வருகிறது.

விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் ரோபோ சங்கர் நடிப்பில் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கிறது சக்ரா. எம்.எஸ்.ஆனந்தன் படத்தை இயக்கியிருக்கிறார். ஆர்மி அதிகாரியாக விஷால் நடித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஷால் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்த மாதம் காதலர் தின ஸ்பெஷலாக பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகிறது சக்ரா.

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் காமெடி த்ரில்லராக உருவாகியிருக்கும் படம் ட்ரிப். காட்டுக்குள் ட்ரிப் செல்லும் நண்பர்களுக்கு நடந்த த்ரில்லர் அனுபவங்களே படம். சுனைனா படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கிறார். யோகி பாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சந்தானத்துக்கு ரொம்ப நாளாக ரிலீஸாக முடியாமல் கிடப்பில் இருக்கும் படம் சர்வர் சுந்தரம். ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் படம் உருவாகியிருக்கிறது. 2017 செப்டம்பரிலேயே வெளியாகியிருக்க வேண்டியது என்பதில் இருந்து, எந்த அளவுக்குத் தாமதமாகியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு முறையும் ரிலீஸ் உறுதி செய்து தள்ளிப் போய், இப்போது பிப்ரவரி ரிலீஸை உறுதி செய்திருக்கிறார்கள்.

இந்தப் படங்களோடு இன்னொரு படத்தின் ரிலீஸ் குறித்தப் பேச்சுவார்த்தையும் நடந்துவருகிறது. அந்தப் படம்தான் வேட்டை நாய். ஆர்.கே.சுரேஷ் மற்றும் ராம்கி இருவரும் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். ஆக்‌ஷன் திரைப்படமாக சின்ன பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தையும் பிப்ரவரியிலேயே ரிலீஸ் செய்துவிடப் பேச்சுவார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறது.

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

3 நிமிட வாசிப்பு

'ஜவான்' : பெரிய தொகைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்!

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

4 நிமிட வாசிப்பு

சந்திரமுகி: சாய்பல்லவி மீது இயக்குநர் அதிருப்தி!

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

'பத்து தல' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஞாயிறு 31 ஜன 2021