மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 31 ஜன 2021

குட்டி லவ் ஸ்டோரி: ஓடிடிக்குத் திட்டமிட்டு தியேட்டருக்கு வர காரணம்!

குட்டி லவ் ஸ்டோரி: ஓடிடிக்குத் திட்டமிட்டு தியேட்டருக்கு வர காரணம்!

கொரோனா லாக்டவுன் நேரத்தில் திரையரங்குகள் திறக்கப்படாததால் ஓடிடிக்கு எனப் பல ஆந்தாலஜி திரைப்படங்கள் உருவானது. அதில், பிரைம் வீடியோவில் ‘புத்தம்புதுக் காலை’ படமும், நெட்ஃப்ளிக்ஸில் ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜி படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படங்கள் உருவான நேரத்தில் உருவான மற்றுமொரு ஆந்தாலஜி படம்தான் ‘குட்டி லவ் ஸ்டோரி’. காதலை மையமாக நான்கு இயக்குநர்களின் கதைகளைக் கொண்டு உருவானது. வேல்ஸ் நிறுவனம் இந்த ஆந்தாலஜியைத் தயாரித்தது.

குட்டி லவ் ஸ்டோரியில் இடம்பெறும் நான்கு கதைகளை வெங்கட் பிரபு, கெளதம் மேனன், விஜய் மற்றும் நலன் குமாரசாமி இயக்கியுள்ளனர். இந்தப் படங்களில் விஜய் சேதுபதி, அமலா பால், மேகா ஆகாஷ் உட்பட சில நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்போது, ஓடிடிக்குத் திட்டமிட்டு உருவான இந்தப் படத்தை, நேரடியாகத் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டு வருகிறாராம் வேல்ஸ் ஐசரி கணேஷ்.

ஐசரி கணேஷ் தயாரிப்பில் நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. திரையரங்குக்காக உருவாகி, ஓடிடிக்குச் சென்றது. இப்போது, ஓடிடிக்கு உருவாகும் ‘குட்டி லவ் ஸ்டோரி’ முதலில் திரையரங்குக்கு வருகிறதாம். இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அது என்னவென்றால், வெங்கட் பிரபு, கெளதம் மேனன் என நான்கு இயக்குநர்களுமே பெரிய இயக்குநர்கள். அதோடு, விஜய் சேதுபதி, அமலா பால் மாதிரியான பெரிய நட்சத்திரம் நடித்திருப்பதால் திரையரங்க வசூலை ஏன் விட வேண்டும் என யோசிக்கிறதாம் படக்குழு. அதோடு, ஓடிடி நிறுவனங்களும் முதலில் திரையரங்க ரிலீஸை தான் விரும்புகிறதாம். தியேட்டரில் வெளியாகி மக்கள் மத்தியில் பிரபலமானதும், ஓடிடியில் வெளியானால் அங்கும் நிறைய ரசிகர்களால் பார்க்கப்படுமாம். அதனால் முதலில் திரையரங்கில் வெளியிட்டுவிடலாம் என யோசிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

ஞாயிறு 31 ஜன 2021